முடிவுரை.


கண்ணன் பாட்டுடன் தொடங்கிய தொகுதியை
கண்ணன் பாட்டுடன் முடிப்பது தானே முறை?
எண்ணங்களின் வண்ணக் கலவை என்னும்
என் கவிதைத் தொகுப்பு முற்றுப் பெறுகிறது.

திட்டங்கள் எதுவும் இன்றியே கவிதைகளைத்
தீட்டி இருந்ததால், வைத்துக்கொண்டு அவற்றைச்
செய்வது அறியாமல் விழித்தேன் நான் அன்று!
செய்த முயற்சிகள் வீண் போகவில்லை இன்று!

என் தந்தைக்கும், தாய்க்கும் நான் சமர்ப்பித்த
நன் முயற்சிக்கு நல்வரவு கிடைத்துள்ளது!
ஒன்பது மாத காலத்தில் அக்கவிதைத் தொகுப்பை
ஏறக்குறைய 6,700 பேர்கள் படித்துள்ளனர் .

விமரிசனமும் நல்ல ஊக்கம் அளிக்கின்றது.
விரும்புபவர் காணலாம் என் Home page இல்.
கண்ணன் அருள் இன்றி எதுவுமே நிகழாது!
கண்ணன் விரும்பினால் இன்னமும் வரும்!

மண்ணில் உள்ளன அறிய வேண்டியவை இன்னும் பல.
கண்ணன் மனது வைத்தால் மீண்டும் சந்திப்போம் நாம்!
வந்து, படித்து, எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட
அன்பு உள்ளங்களுக்கு என் வணக்கமும், நன்றியும்!

கண்ணனைப்  போன்ற  குறும்பும், என் இஷ்ட தெய்வம்
கந்தனைப் போன்ற துறுதுறுப்பும் கொண்ட மகனையும்,
கணவனையும், வீட்டையும் பராமரித்தபடியே, என்னுடைய
கவிதைத் தொகுப்பையும் பிரசுரித்த மருமகள் ரூபாவுக்கும்,

கடல் போன்ற சுற்றத்தினரையும், பல நண்பர்களையும் ,
இடைவிடாத இசை வகுப்புகளையும் சமாளித்தபடியே,
திருத்தி என் கவிதைகளுக்கு மேலும் பட்டை தீட்டி
மெருகு ஏற்றிய தங்கை ராஜி ராம் அவர்களுக்கும் நன்றி!

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.

Conclusion.

My 185 poems in this collection,
Have reached their completion!

They were just at random penned,
They were not at all preplanned!

I wondered what to do with them!
Those products of worldly wisdom.

Those tense days have gone away,
Pushed by success’s gentle sway.

This collection dedicated to my parents,
Has been welcomed by 1000s of persons.

In about months half and nine,
More than 6700 views have been.

The review I got is a good one too!
Can be viewed in my home page too!

Nothing happens unless wished by God.
May be He will wish for another load!

If He does, we are sure to meet again,
Till then please keep reading these again!

With infinite gratitude do I thank,
Those who shared their views frank.

with warm regards and sincere thanks,

yours sincerely,
Visalakshi Ramani.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s