என் எழுத்தைப் பற்றி

ஆன்மீகத் தேடலில் நான் கண்டு எடுத்த சில அரிய முத்துக்களே நீங்கள் காணப்போகும் எனது கருத்துக்கள்.

படிக்க நேரம் இல்லாததால் சிலரும், புரிந்து கொள்ள முடியாததால் சிலரும், சரியான குரு கிடைக்காததால் சிலரும் இந்த அரிய கருத்துக்களை அறியாமல் இருக்கலாம்.  இறைவன் அருளால் எனக்கு நேரமும் உள்ளது.  நல்ல குருவும் கிடைத்தார்.  நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று முனைந்து இவற்றை உங்களுக்கு அளிக்கின்றேன். கருத்து பரிமாற்றங்களும் (கருத்து யுத்தங்களும் கூட) வரவேற்கப்படுகின்றன.

என்றோ விதையாக ஒளிந்திருந்த என் எழுதும் திறனை,
அன்றே கண்டு கொண்ட என் தந்தை டாக்டர் ராமனுக்கும்;
இன்றுவரை என்னை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி வரும்
அன்னை திருமதி மீனாள் ராமனுக்கும் இந்நூல் சமர்ப்பணம்.

திருத்தி, மெருகேற்றிக் கொடுத்த அன்புத் தங்கை
திருமதி (கவிஞர்) ராஜி ராம் அவர்களுக்கும்,
பொருத்தி வலையில் அழகுற அமைத்துத் தந்த,
மருமகள் ரூபா ராமனுக்கும் நன்றிகள் பலப்பல.

இள வயதிலேயே இறைவனிடம் பக்தியையும்,
வளம் கொழிக்கும் இனிய கர்நாடக இசையையும்,
கணித, ஆங்கில இலக்கணத்துடன் கலந்தூட்டிய,
கண் போன்ற என் தாத்தா திரு K.R.நாராயணனுக்கு
எண்ணிலடங்காத நன்றிகளும், வந்தனங்களும்,
என் வாழ்நாட்கள் உள்ளளவும் உரித்தாகுக!

முதல் முறையாக ஆன்மீகத்தில் நுழைபவர்களுக்கு,
முதல்பகுதியில் உள்ளவை கடினமாகத் தோன்றலாம்.
முறையை மாற்றி, இறுதியில் இருந்து படிக்கத் தொடங்கி,
முயன்று நான் அளித்தவற்றை, எளிமையாக ரசிக்கலாமே!

வாழ்க வளமுடன்,
உங்கள் உண்மையுள்ள ,
விசாலாக்ஷி ரமணி.

Illustrations are done using Google images.

Advertisements

8 Responses to என் எழுத்தைப் பற்றி

 1. ராஜி ராம் says:

  நன்றி பாராட்டுவது அரிய செயல். என் தினைத்துணை உதவியைப் பனைத்துணையாய்ப் பாராட்டியதால் நெகிழ்ந்தது நெஞ்சம். நன்நூலை அன்னை தந்தைக்கு சமர்ப்பணம் செய்தது சாலச் சிறந்ததே!
  அன்புடன், ராஜி ராம்.

 2. காலத்தால் செய்த உதவி சிறிதெனினும்
  ஞாலத்தின் மாணப் பெரிது அன்றோ?
  Visalakshi Ramani.

 3. venkat kumar says:

  all the best
  anbudan
  venkatkumar renu

  we realy enjoy ur articles thanx

  • dear Mr. Venkat Kumar and Mrs. Renu,
   Thank you for your feedback. Only your comments and suggestions make me write better and keep me going!
   I hope you have visited my other two sites also.
   with warm regards,
   Visalakshi Ramani.

 4. v l brinda says:

  i also want to write some article in young world. Will you please help me.

 5. vl brinda says:

  நான் என்ன சொல்ல நினைப்பது என்றால் பெரும் பாலான மக்கள் ஹிந்தி பேசுவதால் ஹிந்தியை தேசிய மொழி என்றால் பகவத் கிதையும் பெரும் பாலான மக்கள் படிக்கும் நூல் என்பதால் பகவத் கிதையும் தேசிய நூல் ஆகலாம். அதை தவிர புடவை என்பது ஆங்கிலேயர் அணியும் உடை இல்லை. அதனால் ரவிக்கையை ஆங்கிலேயர் கண்டு பிடித்து இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

 6. Nothing should forced. If Hindi is used no one other than Tamizh makkal will have problem.since Hindi is taught in all the other states – including the other Southern states! 😦
  Everybody talks about Bhagavat Gita. I doubt how many of them have imbibed the gist of Gita and employed it in their lives.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s