குறுகிய மனம்


சிறிய கல்லை கண் அருகில் வைத்தால்,
சிறந்த உலகம் மறைந்தே போய்விடும்;
தள்ளி நின்று கல்லைக் காண முயன்றால்
தட்டுப்படாது அச்சிறுகல் நம் பார்வைக்கு!

மனிதனின் மனமும் இதைப்போன்றே,
மாறி மாறி அனைத்தையும் அறிந்து கொள்ளும்;
அருகில் இருந்தால் குறை மிகப் பெரிது,
ஆகாசத்தில் இருந்தால் தெரியவே தெரியாது!

மரம், புல், பூண்டு, புதர்கள் என்று பலவாறு,
மாறுபட்டுக் காட்சி அளிப்பவை எல்லாம்,
மலை உச்சியில் நாம் நின்று பார்த்தால்,
மனத்தை மயக்கும் வெறும் பச்சை வெளியே.

உயரும் போது உள்ளமும், பார்வையும்,
உயர்வடைந்து நன்கு விரிந்து செல்லும்;
குறுகிய மனம் கொண்டால் வட்டம்,
குறுகி மிகச் சிறியதாக ஆகி விடும்.

அருகில் இருக்கும் போது மனிதரின்
அருமை பெருமைகள் தெரியாது, ஆனால்
உருவெடுக்கும் ஒரு விஸ்வ ரூபமாகவே
உள்ள சிறு குற்றம் குறைகள் எல்லாம்!

அருகில் உள்ளதை வெறுத்துத் தவிர்க்கவும் ,
தொலைவில் உள்ளதை விரும்பி விழைவதும்,
அறிந்துள்ளது நன்றாய் மனித மனம், இதை
அறிவோம் நன்கு, அறிவுள்ள எல்லோருமே.

விரும்பிப் போனால் அது விலகிப்போகும்,
விலகிப் போனால் அது விரும்பி வரும்!
கொஞ்சினால் மிஞ்சுவதும், மாறாய்
மிஞ்சினால் கொஞ்சுவதும் மனித இயல்பே.

பார்வையின் வட்டத்தை பெருக்குவோம்,
பாரினில் உயர்ந்ததை உள்ளுவோம்,
பரந்த மனத்தால், பரந்த பார்வையால்
சுரக்கும் இன்பமே பிறந்த பூமியில்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

NEARER AND FARTHER.

If we hold a small very stone close to our eyes, it would hide the whole wide world sprawling in front of us. But if we toss it to the ground it most likely that we won’t able to even locate it.

It is the same thing with human mind. The faults of the near-ones look mountainous and the real mountains far away look like mole hills.

The trees, plants, shrubs, grass all look different to us. But if viewed from the top of a mountain everything appears just as patches of green.

When we stand on the mountain top our vision broadens and the minor differences do not show up. But when we stand on the ground, the differences stand out very well.

We always tend to magnify the minor faults of the people closer to us. The things and persons far away from us look perfect, attractive and likable.

There is saying that if we approach anyone with affection they will give us hard time. If we move away from someone, then he/she will come closer seeking our affection.

It is the same theory followed by a person and his shadow! Chase it and it will keep running away form you but turn back and it will start to follow you like a loyal puppy.

Let us widen the horizon of our vision. Let us think about the greatness of everything and learn to ignore its short comings. With a broad mind and broader vision, we will find the world a much better place to live in.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s