அறிவும், அன்பும்


ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது,
ஏற்படும் அனுபவமே உண்மை அறிவு.
சொல்லுதல் எளிது, செய்வது கடினம்,
சொல்லுவது அறிவு, செயல் புரிவது அன்பு.

நிரம்பக் கற்றவர்கள் மனதில், கற்றதின்
கர்வம் உண்டாகும், கண்கண்ட உண்மை;
நிரம்பத் தொண்டு செய்பவர் மனதிலோ,
கனிவு, பணிவு, இனிமை வளர்ந்து மலரும்.

தர்க்கம், வாதம், போட்டி, பேட்டி என,
தேடிச் செல்லுவர் நன்கு படித்தவர்,
தொண்டு, உதவிகள், சேவை என்று
நாடிச் செல்லுவர் உண்மைத் தொண்டர்.

ஆத்ம அனுபவத்துக்கு நல்ல வழிகளை
அறிந்திருந்தாலும், முயலார் கற்றவர் .
அனுபவத்திலேயே வழி கண்டு கொள்ளுவர்
ஆன்ம ஞானத்துக்கு, உண்மைத் தொண்டர்.

காரண காரியங்களை எல்லாம் ஆராய்ந்து
காண விழைவர் நன்கு படித்த அறிஞர்.
சாதனையிலேயே தன் மனத்தை முழுதும்
செலுத்துவர் இறையின் உண்மைத் தொண்டர்.

உயந்த அறிவு நிரம்ப உண்டு அவரிடம்.
உண்மைத் தொண்டு நிரம்ப உண்டு இவரிடம்.
அறிவே பெரும் சுமையாகிவிடும் அவருக்கு,
அன்பே உலகை இன்பமாக்கும் இவருக்கு.

சாஸ்திரங்கள் பல கற்றாலும், சாதனைகள் பல
செய்தாலும், திருப்தி இல்லாதவர் அவர்.
விவேக, வைராக்யங்களால் மனஅமைதி,
வியத்தகு வண்ணம் கொண்டவர் இவர்.

அறிவும் அன்பும் இரண்டுமே அவசியம்,
அவனியில் நாம் பயன் தர வாழ்ந்திடவே;
அறிவு என்பது ஒளிரும் சூரியன் என்றால்,
அன்பு என்பது குளிர்ந்த வெண்ணிலவாகும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

INTELLECT AND HUMANISM.

Dry intellect does good to no one! The knowledge obtained from the various experiences is the real useful intelligence. It is very easy to preach but it is very difficult to enact our preachings.

A very highly educated person becomes very proud, due to his academic achievements. But a humanitarian becomes humbler and kinder as the days roll by.

The intellectual goes out of his way to prove his worth by taking part in debates, discussions, interviews and competitions. The humanitarian goes out of his way to find fresh opportunities to serve the others.

An intellectual finds it hard to discover the secrets leading to self realization. But the humanitarian is slowly and steadily led to Atma Anubhavam by his selfless service. The intellectual wants to prove everything using the theories he knows. The humanitarian gains the same knowledge more easily by his experiences.

Knowledge becomes a burden to the intellectual. Life is a happy song for the humanitarian. The intellectual yearns for awards, rewards and recognitions. The humanitarian develops Vivekam and Vairaagyam through his selfless service.

Intellect can be compared to the bright and hot Sun while the humanism can be compared to the cool and pleasing moon. We need both the Sun and the moon.

If the intellect and humanism are combined in one person, what more can we ask for?

Advertisements

3 Responses to அறிவும், அன்பும்

 1. natarajan.c says:

  நன்றி !
  சிற்சபையின் கண்ணே சிந்தையை செலுத்துக!
  ஜோதி தன்னையே நினைத்து சுகம் பெறுக!!

  • சிந்தையில் நிறைந்தவன் சிவகுமாரன் தான்
   தந்தைக்கு அவன் இளைத்தவன் அல்லவே!

   திருவிளையாடல் புராணமும் படைத்துள்ளேன்
   கந்த புராணமும் எளியதமிழில் படைத்துள்ளேன்.

   படியுங்கள்! படித்தபின் இது போன்றே இங்கு
   வடியுங்கள் உங்கள் இனிய கருத்துக்களை.

   http://visalakshiramani.weebly.com/

  • The complete list of my blogs can be accessed by
   clicking on the link: My blog of blogs! in my home page.
   Clicking on any of those blogs will give an
   introduction to it and navigate you to the website.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s