நன்மையே விழைமின்


காட்டு வழியில் நடந்து களைத்த,
காளை ஒருவன் தூரத்தில் கண்டான்,
விரிந்து பரந்து தண் நிழல் தரும்,
வியத்தகு வினோத மரம் ஒன்றினை.

நெருங்கிச் சென்றான்; மரத்தின்
நிழலில் உடல் குளிர அமர்ந்தான்;
பசியும் தாகமும் ஒன்றாக உருவாகி,
பிசைந்தன அவன் காலி வயிற்றை!

கைகள் இரண்டும் மிகவும் வலித்தன;
கால்கள் இரண்டும் மிகக் குடைந்தன;
“பஞ்சு மெத்தை நல்லது இருந்தால்,
கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்”, என்று

நினைத்த மாத்திரத்திலே, அங்கே
நின்றது ஒரு அம்சதூளிகா மஞ்சம்!
“குடையும் என் கைகால்களின் வலி
குறையும் அழுத்தினால்”, என எண்ண,

கல கல என்ற வளை ஒலியுடன்,
சில இளம் கன்னிகள், அவனுடைய
கால் கை பிடிக்கத் தொடங்கினர்,
களைப்பு மாறுகின்ற வகையில்.

“பசிக்கு அறுசுவை உணவினைப்
புசித்தால் சுகம்தான்”, என நினைக்க,
கண் முன் தோன்றின கலயங்கள்;
கண்டிராத புதிய உணவு வகைகள்!

இத்தனை நடந்த பின்னும் அந்தப்
பித்தன் அறியவே இல்லை, தான்
இருப்பது, நினைத்ததை எல்லாம்
தரும் கற்பக மர நிழலில் என்று!

உணவு உண்டவுடன் எண்ணினான்,
“ஒரு பசித்த புலி வந்தால் என்ன ஆகும்?”
உறுமலுடன் காட்சி தந்தது ஒரு வெம்புலி!
“ஓடிவிடவேண்டும் புலி”, என எண்ணாமல்,

“என்னைப் புலி கடித்துக் கொன்றால்
என்ன செய்வேனோ?”, என்று பதற,
கடித்துக் கொன்றது புலியும் பாய்ந்து!
கற்பக மர நிழலில் உயிரை விடுவதா?

எதை வேண்டுமானாலும் கேட்கலாம்;
எண்ணியபடி எதையும் அடையலாம்; ஆனால்,
நினைத்ததோ ஒரு காட்டு வெம்புலியை;
அணைத்ததோ ஒரு கொடிய மரணத்தை!

எப்போதும் நல்லவற்றை நினைமின்;
எப்போதும் நல்லவற்றை உரைமின்;
எப்போதும் நல்லவற்றைச் செய்மின்;
எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

ENTERTAIN GOOD THOUGHTS.

A young man walked a long way and saw an unusual tree at a distance. He was very tired and wanted to rest under it shade. He sat in it shade, hungry, thirsty and extremely tired!

He wished that he had a soft bed on which he could rest his tired limbs for a while and there appeared a bed made of the finest swan feathers. He lied down on it and wished that some one would massage is tired legs gently. There are appeared several pretty young maidens and started massaging his legs very gently.

He now wished that he had some thing to eat. There appeared several plates with the most fascinating dishes he had ever tasted. He ate to his heart’s delight and did not realize even then that he was sitting under the ‘Karpaga Vruksham’ which could give us anything we desire.

Suddenly he thought in fear, “What if a ferocious tiger appears here!”
Immediately a large angry tiger appeared there.

Instead of wishing that it should go away he wondered ,”What if it kills me?” The tiger pounced on him and killed him immediately.

Will anyone in his right sense give up his life under the ‘kalpaga vruksham’? He could have asked for anything and git it.
He thought of a tiger and death and got killed by a tiger.

We must always entertain good thoughts, say good words and do good deeds. Then everything happening to us will also be invariably good!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s