மௌன மொழி!


குறை குடம் தான் தளும்பி வழியும்;
நிறை குடம் என்றுமே தளும்பாது!
நெல்லின் பதர்கள் காற்றில் பறக்கும்,
நெல் மணிகள் என்றுமே பறக்காது!

இறைவன் தந்தான் இரண்டு செவிகளை,
நிறைய நிறைய நாம் கேட்பதற்காக!
இறைவன் தந்தான் ஒரே ஒரு நாவினை,
குறைவாகப் பேச வேண்டும் என்பதற்காக.

அறிவிலிகளும் அறிவாளர்களே, தங்கள்
திருவாயைத் தாம் திறக்காத வரையிலும்.
கன்று முட்டி, முட்டிப் பால் வேண்டுவது போல,
நின்று கேட்பவர்களிடமே நாம் பேச வேண்டும்.

பால் பொங்கிய பின் வெளியே வழியும்,
மனம் பொங்கி நிறைந்த பின்னரே,
பால் போல் இனிய சொற்கள் வழிந்து,
மனம் குளிர வெளியில் வரவேண்டும்.

பயனில்லாச் சொல் பாராட்டக் கூடாது,
புறம், கோள், வம்புகள் பேசக்கூடாது;
முத்து உதிர்ந்தார்ப் போலப் பேசினால்,
உற்று கவனிப்பார்கள் மற்றவர்களும்.

பேசாத போதுதான் நினைவலைகள்,
தூசாக அடங்கிச் சற்று அமைதியுறும்;
பள்ளத்தை நோக்கி ஓடும் வெள்ளம் போல,
உள்ளத்தை நோக்கி ஓடத் தொடங்கும்.

உள்முகமாகச் சென்றால்தான் பல
உண்மைகள் நமக்குப் புரிய வரும்.
உண்மைகள் புரிந்த பின்னர், நமது
வண்மைகள் நமக்கு நன்கு புலப்படும்.

அதிகம் பேசுபவராக இல்லாமல்,
மிதமாகப் பேசுபவராக மாறுவோம்;
சக்தி வாய்ந்த நம் வார்த்தைகளை,
யுக்தியுடன் நாம் பயன்படுத்துவோம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

SILENCE IS GOLDEN.

A half filled vessel spills over. A vessel completely filled does not spill over. An empty vessel makes the most noise. The chaff flies high in the blowing wind while the heavy grains fall down and stay on the ground.

God has given us two ears but only one tongue. So we should listen to more than what we talk! Even the dumbest fool can pass for an intellectual or even a philosopher…as long as he does not open his mouth and expose his ignorance.

We must talk only to persons who are willing to listen to us with interest-just like the cow responding to the stimulus of the calf be secreting more milk.

The milk kept on fire rises to the brim and then spills over. In the same way the mind must be filled with thoughts and only then they must come out through the mouth as words – to the satisfaction of the speaker as well as the listener.
.
We should not waste our time in useless talk, chit chat, bickering, back biting, complaining, commenting and comparing others. Less we speak, better the others will listen to it.

Only when we refrain from talking, our thought waves cease. The mind becomes free and starts exploring the inner self. Only when we travel inwards into our mind, the mysteries of the creation will be reveled to us. Our mind is mini universe in itself!

Let us not waste our words any more. Let us all become ‘Mitha Baashi’ like Lord Sri Rama and speak only limited and necessary words.

Words are powerful and sharp instruments. Let us learn to us them wisely.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s