விஷயம், விளம்பரம்


இது ஒரு சிறந்த விளம்பர யுகம்!
எதை விற்பதானாலும் வேண்டும்,
கதை போன்ற ஒரு நீண்ட விளம்பரம்.

பொய்களில் மூன்று வகைகள் உண்டு;
அண்டப் புளுகுகள் , ஆகாசப் புளுகுகள்,
அறிவை மயக்கும் விளம்பரப் புளுகுகள்!

மணலை மலையாகக் காட்ட வேண்டுமா ?
பேனை பெருமாள் ஆக்கவேண்டுமா ?
பேனா செய்யும் இவ்விளம்பர மாயங்கள்!

தரம் இருந்தால் விளம்பரம் எதற்கு?
தரம் குறைந்த பொருட்களைத் தள்ளவே;
தரம் குறைந்த விளம்பரங்கள் தேவை.

“என்னிடம் தேன் உள்ளது” என்று
எந்த மலர் விளம்பரம் செய்தது ?
வண்டுகள் தேடி வரவில்லையா?

“என்னிடம் பழம் உள்ளது” என்று
எந்த மரம் விளம்பரம் செய்தது ?
கிளிகள் கொத்த வரவில்லையா?

பால் இருக்கின்றதென்று பசுவோ;
நூல் இருக்கின்றதென்று பஞ்சோ;
தோல் இருக்கின்றதென்று எருதோ;

எப்போதேனும் விளம்பரம் செய்யுமா?
தப்பாமல் நாம் தேடிச் செல்கின்றோமே.
விஷயம் இருந்தால், வேண்டாம் விளம்பரம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

AD FADS.

This is the age of advertisements. We need an ad to sell any product. There are three types of lies – the harmless little lie, a hoax and the advertisement!

Do you want to project a grain of sand as a hill or a mole hill as a mountain? An ad can achieve these feats very easily!

If the products are of a good standard, there is no need for any ad. People will come forward and buy them without being enticed and invited.

Does any flower advertise that it has honey? Yet the honey bees make bee-line to them! Does any tree advertise that it has got sweet ripe fruits? Yet the parrots locate them quite well!

No cow advertises about its milk, nor an ox about its leather nor a cotton fruit about its threads! Yet we also go to them for their products.

There is no need for an ad if the product is really good!

Advertisements

4 Responses to விஷயம், விளம்பரம்

 1. //விஷயம் இருந்தால், வேண்டாம் விளம்பரம்!

  நன்றாக சொன்னீர்கள்..
  ஆனால் இந்த அவசர யுகத்தில்… பக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் கூட விளம்பரம் இல்லாமல் நமக்கு தெரிய வாய்ப்பில்லையே.

 2. நான் கூறும் விளம்பரம் advertisement
  நீங்கள் கூறும் விளம்பரம் announcement.
  இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன அல்லவா?

  அதையேதான் நானும் கூறுகின்றேன்
  தரம் இருந்தால் விளம்பரம் வேண்டாம்,
  அறிவிப்புக்கள் கூட அவசியம் இல்லை.
  மக்கள் தானே தேடிக்கொண்டு வருவர்.

  விசாலாக்ஷி ரமணி

 3. vl brinda says:

  1. தாழம்பு மறைத்தாலும் மணக்கும்.
  2. கஸ்தூரி மான் தூரத்தில் இருந்தாலூம் வாசனை வரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s