சுவர்க்கம், நரகம்!


சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?
அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?
சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே
சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,
இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்
கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.
எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி
நானா இன்னல்கள் அடைத்தாலும்,
சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,
இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.
சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!
“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?
பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!
நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.
நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

HEAVEN AND HELL.

Do you know how the Heaven differs from the Hell ? The Heaven and Hell differ only due the differences among souls occupying them.

When a person visited the Heaven and the Hell, he found that they were very much similar. All the souls living there had long heavy wooden spoons tied to their hands – limiting their movements. They can not bend their hands at the elbows and so none of them could not eat food!

The souls in the Hell looked famished and grumpy while those in the Heaven were well – fed and happy. What made this possible?

The souls in the Heaven demonstrated how they could achieve this feat. Each soul fed the one sitting opposite to him and they helped one other to eat food.

The story was contrary in the hell! Everyone was grumbling.”Why should I feed him? Let him starve just the way I am starving!”

Heaven and Hell are not outside our minds. The selfish persons living only for ‘ I ‘ and ‘ My ‘ create a hell and live in it, while those who help the others around them create a heaven, and live in it. It is as simple as that!

Advertisements

2 Responses to சுவர்க்கம், நரகம்!

  1. vl brinda says:

    நாம் இங்கு இருந்தால் சுவர்கம் , அங்கு இருந்தால் நரகம் என்று எல்லாம் கருத கூடாது. எங்கு இருந்தாலூம் வாழ பழகிக்கனும். ஏன் என்றால் இக்கரைக்கு அக்கரை பச்சை. அக்கரைக்கு இக்கரை பச்சை.கருடா கருடா சுகமா என்றால் இருக்கும் இடமே சுகம் என்பது பழமொழி.யாருக்கு தெரியும் நாம் இப்ப இருக்கும் நிலையை விட மோசமான சுழ்நிலையில் சிக்கிகொள்ளலாம். எலி வலையிலிருந்து தப்பி புலி வலையில் மாட்டிக்கொள்ளலாம்.

    • நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
      “நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s