இனம் இனத்தோடு


உலகினை வெறுத்து, உண்மையைத் தேடி;
உள்ளத்தை அடக்கி, உன்னித் தவம் செய்த;
ஒரு முனி மடியில், விழுந்தது சிறு எலி;
பருந்திடமிருந்து, திமிறிப் பிழைத்தது.

தன் தவ வலிமையால் அச்சிறு எலியை,
தவழும் குழந்தையாய் மாற்றினான் முனிவன்.
தவத்தையும் மறந்து, குழவியைப் பேணி,
தாயும், தந்தையுமாய், மாறினான் முனிவன்.

காலம் பறந்தது, நாட்கள் உருண்டன;
கண் கவர் கன்னியாய் வளர்ந்து நின்றாள்.
காலம் தாழ்த்தாமல் கடி மணம் முடிக்க,
எண்ணினான் முனிவன், தண் அருளோடு.

அருமை, பெருமையாய் வளர்த்த மகளை,
அன்புடன் பேணும், கணவனைத் தேடினான்.
சிறுமியும் உரைத்தாள், தன் சீரிய கணவன்,
சிறந்தவனாகத் திகழ வேண்டும் என.

ஒளியுடன் வெப்பமும், உமிழ்ந்துயிர் காக்கும்,
ஒளிக் கதிரவனை அழைத்தான் முனிவன்.
“உலகினில் சிறந்தவன் நீயே அதனால்,
வலக்கரம் பிடிப்பாய் என் சிறு மகளின்”.

“ஒளியும் வெப்பமும் உமிழ்ந்த போதிலும்,
ஒளி குன்றிடுவேன் ஓர் கார் மேகத்தால்.
என்னைக் காட்டிலும் சிறந்தவன் மேகமே,
சின்னப் பெண்ணை அவனுக்கு அளியும்.”

சொன்ன கதிரவன் சென்றபின் முனைந்து,
மன்னுயிர் காக்க மா மழை பொழியும்,
மண்டிய மேகத்தை அழைத்தான் முனிவன்.
வேண்டியபடி மணம் புரியச் சொன்னான்.

“ஊதும் காற்றால் உருக்குலைவேன் நான்.
ஊரார் அறிவார், காற்றே வலியவன்.
உங்கள் மகளை அவனுக்கே அளியும்”.
தங்காமல் சென்றான் காரிருள் மேகம்.

ஓடும் காற்றை அழைத்தான் முனிவன்,
தேடும் கணவன் அவனே என்றான்.
“ஓடும் என்னையும் வாடச்செய்யும்,
ஒருவன் உள்ளான்; அவன் இந்த மலையே!

என்னைக் காட்டிலும் வலியவன் மலையே,
சின்னப் பெண்ணை அவனுக்கு அளியும்.”
மலையிடம் சென்றான் மாதவ முனிவன்,
நிலைமையைச் சொல்லி, பதில் எதிர்பார்த்தான்,

“வலியவன் நான் என்பது உண்மையே! ஆயினும்,
எலியிடம் தோற்றுப் போவதைக் காண்பீர்.
சிறிய உருவம், ஆயினும் வலிய முயற்சியால்,
பெரிய என்னையும் துளைத்திடுவான் எலி.”

மலைத்து நின்றான் முனிவன், ஆனால்
மகிழ்ந்து நின்றாள் முனிவரின் மகள்.
தனக்கு மிகவும் இசைந்த கணவன் அந்த
தன்னிகரில்லா எலியே தான் என்றாள்.

இனத்தோடு தான் இனம் சேரும் அன்றோ!
அனைத்தும் அறிந்தவன், இதை அறியவில்லை.
கனத்த மனத்தோடு, வருந்திய போதிலும்;
மனத்துள் வாழ்த்தி, மணம் செய்வித்தான்.

கதிரவனையும், கார் மேகத்தையும் விட,
காற்றையும், கனத்த கல் மலையையும் விட,
சிற்றெலி தான் சிறந்தவன் என்று நம்மால்
சிரிக்காமல் சொல்ல முடியுமா பாரும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

BIRDS OF A FEATHER…!

A great rishi had denounced the world and was absorbed in severe tapas. A tiny mouse struggled and escaped from the clutches of a kite flying above and fell own on his lap. He was deeply moved to pity to see the scared little mouse shivering all over. He transformed he muse to a beautiful baby girl.

Caring for his new found daughter became his prime concern. He became her father, mother, friend, philosopher and guide. Years rolled by and the girl attained marriageable age. The rishi would wed his daughter only to the most worthy person. None but the best could become his son in law.

The Sun God was the most powerful in the entire creation. He requested the Sun to accept his daughter for a wife. But the Sum God replied politely, ” I may appear all powerful but it is not true! A small could can hide me completely screening off my heat and light rays. There is no doubt that the cloud is stronger than me.”

Th rishi approached the cloud and begged him to marry his daughter. The cloud replied politely, ” Sire I can hide the Sun and block his rays. But a strong wind can blow me out of shape and destroy me. Undoubtedly the wind is stronger than me.”

Now the rishi approached the wind and requested him to marry his daughter. The wind replied, ” Sire I can blow the cloud out of shape no doubt but a mountain can stop me completely. You can very well see that a mountain is much stronger than me.”

The rishi approached the mountain. The mountain replied, “Sir! I can stop the wind but the little mouse there can make tunnels in my body. He is stronger than me. He may be a better husband to your daughter.”

The rishi stood speechless. But his daughter jumped with joy and excitement.,”Yes father! He will make a perfect husband for me!” The rishi was crestfallen but performed the wedding after transforming the mouse into a handsome young man.

The rishi knew everything but had forgotten the fact that birds of a feather flock together.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s