முனிவரும், நாகமும்


அரும் தவ முனிவர் ஒரு முறை கண்டார்,
கரு நிற நாகம்! கண்டவர்கள் ஓடும் படியாக;
எதிர்ப்பட்டவரை எல்லாம் துரத்தித் துரத்தி,
எதிப்பவர்களைக் கடித்துக் கொல்லும் நாகம்!

“உயிர்க்கொலை பாபம், நீ தவிர்ப்பது நலம்,
உயிரைப் பறிக்கும் படிக் கடிக்காதே”, என்று
நல்ல வார்ததைகள் கூறிய முனிவர் பின்னர்,
செல்லலானார் அவர் தம் வழியிலே.

மறுமுறை முனிவர் அவ்வழி வந்த போது ,
மண்டிய புண்களுடன் குற்று உயிராகி விட்ட,
நாகத்தைக் கண்டு மிகவும் வருந்தி வினவினர்,
“நன்றாக இருந்த நீ ஏன் இப்படி ஆகிவிட்டாய்?”

“உங்களால் எனக்கு ஏற்பட்டது இந்த கதி!
ஊராரை நான் கடிக்கவில்லை என்பதால்,
சின்னப் பிள்ளை முதல் பெரியவர்கள் வரை,
இன்னல் தந்ததால் காயம் அடைந்தேன்”.

“கடித்து கொல்ல வேண்டாம் என்று சொன்னேன்.
சீறி பயமுறுத்த வேண்டாம் என்று சொன்னேனா ?
அடி படாமல் காத்து கொள்ள நீ சீறத்தான் வேண்டும்.
சீறினால் தான் நாகம், சீறாவிட்டால் வெறும் கயிறு”

முனிவன் சொன்னது இப்போது புரிந்தது.
சினந்த நாகம் சீறியே தன்னை பிறரின்,
கல்லடிகளில் இருந்தும், தடி அடிகளில் இருந்தும்,
காத்துக் கொண்டு பின் நெடுநாள் வாழ்ந்தது

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

A SAINT AND A SERPENT.

A saint was walking through a village. He was horrified to see a black cobra which killed everyone in the village, who dared to cross its path!

He told the cobra,” Killing is a sin! It should be avoided at all costs. Do not kill any one in the future with your poisonous fangs”.

The saint happened to pass through the same village some time later. Now he was shocked to see the cobra with many bleeding wounds on it s body – scarcely alive! He asked it what had caused such a state of affairs?

The snake replied, “It was because I listened to your advice and stopped killing people. They became very bold and started hitting me with sticks and stones – reducing me to this miserable condition!”

The saint replied, “I told you not to bite them. I never said you should not hiss to frighten them. You will be considered a snake only as long as you hiss. Otherwise you will be considered no better than a mere rope. One should not give up totally his inherent swabhaavam”.

The snake understood the saint’s message rightly this time. He hissed to frighten away the people who came to hit him with stones or beat him with sticks. He lived for several years without killing anyone in the village and also without getting hit by them.

One should never give up one’s natural disposition completely and become vulnerable in the eyes of the others.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s