கூடா நட்பு


உலக நிகழ்வுகளை அலசி அசை போடும்,
ஊக்கம் நிறைந்த எலியும், தவளையும்,
நீண்ட நாள் நண்பர்கள், ஒன்றாகவே இருப்பர்,
நீங்கி இருக்க முடியாத நெருங்கிய நட்பு!

“அணு ஆயுதங்களால், உலகுக்கு மிகுந்த
ஆபத்து”, என்று கேட்ட இவ்விரு நண்பர்கள்,
செய்வது அறியாமல் திகைத்து நின்று பின்,
சேர்ந்தே இருப்போம் என்று தீர்மானித்தனர்.

உறுதியான ஒரு கயிற்றை எடுத்து வந்து,
உறுதியாகக் தங்கள் ஒவ்வொரு காலை
சேர்த்து கட்டினர், மனம் மிக மகிழ்ந்தனர்;
சேர்ந்து இருவரும் ஒன்றாய் இருப்பதாலே.

நேரம் சென்றது, தவளையின் உடல்
நீரின்றி வறண்டு காய்ந்து போனது.
நீரை நோக்கி தவளை தாவியது.
நீரில் மூழ்கினால் இறந்துவிடும் எலி.

எலி ஒரு புறமும் தவளை மறுபுறமும்,
எக்கி இழுக்கவே இரண்டும் அரண்டன.
அணு யுத்தம் என இரண்டும் மிரண்டு,
ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கும் போது;

வானில் வட்டமிட்டுப் பறந்த பருந்து,
வானளவாகிய மகிழ்ச்சி அடைந்தது.
மின்னல் போல கீழே இறங்கி, அந்த
பின்னிய கயிற்றை எடுத்துப் பறந்தது.

இருபுறம் தொங்கும் இரண்டு நண்பர்களும்
இனிய உணவாயினர் அந்த பருந்துக்கு.
“கூடா நட்பினால் கேடே வரும்”, என்று
காட்டிடவே உயிர் துறந்தனர் இவர்கள் .

நல்ல நண்பர்களே நன்மைகள் புரிவர்.
அல்லாத நண்பர்களால் கேடே விளையும்.
நல்ல நண்பர்களையே என்றும் நாடுங்கள்,
நலம் பல பெற்று வளமுடன் வாழுங்கள்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE IMPOSSIBLE FRIENDSHIP

A frog and a mouse were the best friends despite the differences between them.They liked the company of each other so much that, they would spend as much time together as possible.

One day they heard two men discussing the threat to the world due to atomic weapons. Both got frightened enough to decide to stay inseparably together.

They got a thick string and tied their legs together in order to stay together. After sometime the skin of the frog got dried and the frog wanted to jump into water. The rat would get drowned if it fell into the pond. So when the frog pulled the rat towards the water, the rat resisted it and pulled the frog towards land.

Suddenly they both got frightened that this was the war people were discussing about. They started pulling each other harder than before. A kite saw this tug of war between the friends it came down in one swoop and carried away the two friends hanging from the ends of the string. They became his delicious meal.

They had sacrificed their lives to teach the world a lesson about the impossible friendship which is bound to destroy both the friends. Good friends help us while bad friends destroy us. We must look for true friends and once we find them, we must cling to them for life.

Advertisements

2 Responses to கூடா நட்பு

  1. vl brinda says:

    It is better to be alone than with bad companies or friends.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s