முதலைக் கண்ணீர்


ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்,
அதில் வசித்த ஒரு அறிவுள்ள குரங்கும்,
நீரில் வாழ்ந்து வந்த ஒரு முதலையும்,
நீண்ட நாட்களாய் நெருங்கிய நண்பர்கள்!

தினம் தினம் பேசிப் பழகிய அவைகள்,
தித்திக்கும் நாவல் பழங்களைப் பகிர்ந்து,
தின்று மகிழ்ந்து, நேரம் போவதே தெரியாமல்,
தினம் தினம் அளவளாவியபடி இருந்தன.

தன் மனைவிக்கும் சில நாவல் பழங்கள்
தன் மனம் மகிழக் கொடுக்க விரும்பி,
சில பழங்களை முதலை ஒரு நாள் காலை
மலர்ந்த முகத்துடன் எடுத்துச் சென்றது.

முதலை நல்லது ஆயினும் அதன் மனைவி,
முதல் தரமான பொல்லாத பெண் போக்கிரி!
குரங்கு தந்த பழ ருசியில் மயங்கியவள்,
குரங்கின் குடலையே சுவைக்க விரும்பினாள்!

ரகளை செய்து கண்ணீர் வடித்து அவள்
முதலையின் மனத்தை மாற்றி விட்டாள்!
“ஏதாவது பேசி ஏமாற்றி என்னிடம் அந்த
ஏமாளிக் குரங்கை அழைத்து வாரும்!”

“இனிக்கும் பழங்கள் கொடுத்த உனக்கு
இனிப்பு வகைகளைத் தர வேண்டுமாம்!
தவறாமல் வரச் சொன்னாள் என் மனைவி”
தவறான எண்ணத்தில் முதலை கூறியது.

முதலையின் பேச்சை நம்பிய குரங்கும்
முதலையின் முதுகில் அமர்ந்து சென்றது.
“தப்ப வழி இனி இல்லை” என்றது முதலை,
“இப்போது எங்கள் உணவு உன் குடலே!”

அப்பாவி ஆனாலும் அறிவாளி! ஆகையால்,
தப்பும் வழியை குரங்கு கண்டு கொண்டது.
“குடலைக் கழுவிக் காய வைத்துள்ளேன்.
உடனே வந்தால் நான் எடுத்துத் தருவேன்!”

மரத்தின் அருகே சென்றதும் நொடியில்
முதலையின் முதுகில் இருந்த குரங்கு
தாவி குதித்துத் தன் மரத்தில் ஏறியது!
“தா உன் குடலை” என்ற முதலையிடம்,

“உடலில் இருந்து வெளியே எடுக்க முடியுமா
குடலை நான் உயிருடன் உள்ளபோதே?
உண்மை பேசாத நண்பன் வேண்டாம்,
உனக்கும் உன் நடப்புக்கும் விடை” என்றது.

பேராசை பெரும் கேடு ஆனது!
மாறாத நண்பனையும் இழந்து,
நாவல் பழங்களையும் இழந்து,
நாவடைத்துப் போயிற்று முதலை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

CROCODILE TEARS!

A monkey living on a tree near a river and a crocodile lining in the river were thick friends for a long time. They used to share the jamoon fruits of the tree and spend time together everyday. One day the crocodile wanted to take some of the fruits to his wife. The monkey obliged by picking the best fruits on the tree.

The crocodile was a good hearted fellow but his wife was a she-devil. She liked the taste of the sweet fruits so much that now she wanted to taste the monkey-who had been feeding on these fruits all his life!

The wife argued, coaxed and threatened her husband into submission and told him to bring the monkey to their place on some pretext, so that they can eat him up.

On the next day the crocodile invited his friend the monkey to a feast arranged by his wife in his honor. The monkey never doubted the words of his long time friend and readily hopped on his back.

When the crocodile was sure that the monkey was at his mercy and could not escape, he revealed his true plan for the feast. The monkey was trusting his friend out of faith but he was also very cleaver animal.

“I have washed and hung out my stomach for drying . If you had told me then and there, I would a have given it to you happily. If you take me back to my tree, I can hand it over to you in a second.”

The foolish crocodile believed the monkey now and took him back to the tree where he lived. The monkey hopped off its back and climbed to the top most branch of the tree.

He asked the crocodile, “Can any animal remove his stomach from his body while he was still alive?
I do not want to be your friend any longer. You are treacherous and not trustworthy. Go back to your water hole”

The crocodile stood speechless and aghast as he had lost a good friend and the life time supply of the sweet jamoon fruits – all in one stroke.

Moral of the story.
Value your friendship more than the vile words of your spouse.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s