யானையும், பானையும்


அரச சபைக்கு அனைவரும் வந்தபின்,
அவசரமாக வரும் அறிஞர் ஒருவரை,
அரசன் கேட்டான், “ஏன் நீர் எப்போதும்
சரியான சமயத்துக்கு வருவதில்லை?”

அறிஞர் கூறினார் தன் பக்க நியாயத்தை,
“சிறு குழந்தை ஒன்று, தான் செய்யும் பல
குறும்புகளால் என்னைப் பாடு படுத்தும்,
வேறு வழி இல்லை! நேரம் ஆகி விடும்”.

“இத்தனை அறிவும் ஞானமும் உடைய,
சித்தனைப் போன்ற உம்மால் கூட, ஒரு
சிறு குழந்தையைச் சமாளிக்க இயலாதா?”
சிரித்துக் கொண்டே கேட்டான் அரசன்.

“நீங்களே பார்த்தால் தான் நம்புவீர்கள்.
நாளையே அந்தச் சிறு குழந்தையை
நானே இங்கு அழைத்து வருவேன்”,
நவின்ற படியே மறுநாள் வந்தார்!

குழந்தைக்கு அரசரைப் பார்த்த குதூகலம்;
குதித்து விளையாடிய படியே கேட்டது,
“எனக்கு ஒரு பெரிய யானை வேண்டும்!”
யானை வந்து நின்றது ஒரே நொடியில்!

மீண்டும் குழந்தை கேட்டது இப்போது,
“மண்ணால் செய்த பானை வேண்டும்!”
நொடியில் வந்தது ஒரு பெரிய பானை.
நீடித்த மகிழ்ச்சியில் மன்னன் இருக்க,

யானையையும், பானையையும் பார்த்த
குழந்தை சொன்னது அரசனிடம் அப்போது,
“யானையைத் தூக்கி இந்தப் பெரிய
பானையில் இப்போதே போடுங்கள்!”

யாரால் முடியும் இச் செயலைச் செய்ய?
யார் என்ன காரணம் சொல்லியும் கேளாமல்;
காலையும், கையையும் வேகமாக உதைத்துக்
கலவரம் செய்தது அச் சிறு குழந்தை.

இப்போது புரிந்தது அந்த அரசனுக்கு,
இவ்வுலகு அஞ்சும் அரசனானாலும்,
எல்லாம் செய்ய வல்லவராக இருந்தாலும்,
எல்லாமும் எப்போதும் செய்ய முடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

AN ELEPHANT AND A POT.

A wise man who was one of the advisers of the king, always arrived late to the king’s durbar. The king became curious and asked him one day what delayed his arrival every day?

The wise man said his young and extremely mischievous child gave him a hard time and invariably he got delayed everyday. The king wondered why such a wise adviser was unable to manage a mere child!

The wise man promised to bring his child along with him to the durbar the next day, so that the king could understand what kinds of problems he had to deal with, on a daily basis.

The child was very happy to be the center of attraction in the King’s durbar. It wanted an elephant. Kings royal elephant with all it decorations was brought there immediately.

Now the child wanted a pot. A beautiful earthen pot duly decorated was brought in.
Now the child demanded that the elephant must be placed inside the pot.

It was an impossible task but no amount of explanation could stop the child from bursting into tears. It started wailing loudly, kicking its legs and beating its hands and threw a terrible tantrum!

Now the king realized that even though he was an all powerful king, there were certain things beyond his capacity.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s