நரியும், நாரியும்!


காகமும், நரியும் என்ற குட்டிக் கதையை
குழந்தைகளும் கூட நன்கு அறிவார்கள்.
கதையின் போக்குச் சற்றே மாறிவிட்டதால்,
கதையின் தலைப்பும் சற்று மாறிவிட்டது.

நரன் என்பது ஒரு மனிதனைக் குறிக்கும்;
நாரிமணி என்றால் ஒரு சிறந்த பெண்மணி.
நரியின் குணத்துடன் நாரியை வெல்லும்,
நரனின் தந்திரமே இங்கு காணப்போவது.

பொறுமையில் சிறந்தவள் பூமியைப் போல;
கருணையில் சிறந்தவள் ஒரு தாயைப் போல;
அறிவில் சிறந்தவள் ஒளிர் சூரியனைப் போல;
அன்பில் சிறந்தவள் குளிர் நிலவைப் போல.

இத்தனை சிறப்புகள் இருந்தபோதிலும்,
எத்தன் நரனிடம் அவள் ஏமாறுவது ஏன்?
மெத்தப் படித்தவளாக இருந்த போதிலும்,
மொத்தமாக ஏமாந்து போவது எப்படி?

தாம் பெற்ற பிள்ளைகளை, அவர்கள் முன்
தாமே புகழக்கூடாது என்கிறது மனு நீதி.
நற்குலத்தில் உதித்ததால், அவள் என்றும்
பெற்றோரின் புகழ்ச்சியைக் கேட்டதில்லை!

நரன் ஒருவன், நரியின் தந்திரத்துடன் வந்து,
நிரம்ப அதிகமாகவே அவளைப் புகழ்வான்
அவள் அறிவை முற்றிலும் மயக்கிவிட்டு,
ஆழ் குழியில் தள்ளி, அவளை அழிப்பதற்கு!

புகழ்ச்சியைக் கேட்டறியாத நாரிமணியும்,
புகழ்ச்சியில் ஏமாந்து மயங்கியே நிற்பாள்!
காகம் தொலைத்ததோ ஒரு சிறு வடையையே.
கன்னி தொலைக்கப்போவதோ தன் வாழ்வையே.

ஆதாயம் இல்லாமல் எவரும் ஒரு பாயும்
ஆற்றோடு போய்விடமாட்டார் அன்றோ?
ஆதாயம் என்ன தேடுகின்றார் என்று நன்கு
ஆராய்ந்து, ஆபத்தைத் தவிர்ப்பீர் நாரிமணிகளே!

ஐந்து அறிவு படைத்த காகம் ஏமாந்ததே
இன்றுவரை அழகிய கதையாக உலவுகிறது.
ஆறு அறிவு படைத்த நீங்கள் ஏமாந்தால்,
அது எத்தனை காலம் பேசப்படும் அறிவீரா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE FOX AND THE WOMAN.

The title should have been The Fox and The Crow. But the story is slightly different. Hence the title too! ‘Naran’ denotes a man and ‘Nari’ a woman. This story is about a Naran who conquers a Nari with the cunning of a Fox.

The girls are as great as the Goddess of Earth in their Patience. They are as kind as the Universal Mother. They are as intelligent as the brilliant Sun. Why then do they get cheated by the cunning men?

Manu Dharma Sastra says that parent should not praise their children in their presence. Being born in a cultured and educated family, she has never listened to any praise at home. When a man praises her sky high, just as the fox did the crow, she becomes intoxicated by the praise and throws caution to the wind.

When a crow forgot itself it lost just a snack but the girl will lose her life and future . No one praises anyone else without an ulterior and selfish motive. If she is swept off her feet and gets carried away, her life gets out of her control.

So be on guard young girls! The story of the crow and the fox has been in circulation since several centuries. If you do anything rash, it will reflect on your family members for the rest of their lives.

Advertisements

2 Responses to நரியும், நாரியும்!

 1. NA Subramanian says:

  The original story is well compared to the present situation. I am also one of the victims of this.
  First, i thought that u r going to tell the story like this. ” The fox asked the crow to sing a song. Crow, kept the vadai in its leg and sung a song. After completing the song, it brought back the vadai to its beak!”

  • மேதை என்னும்படி மெத்தப் படித்த
   பேதைப் பெண்களின் கதை இதுவே!
   பாசவலையில் சிக்கியுள்ள பெற்றோர்களும்
   நேசம் மறக்கமுடியாமல் துவளுகின்றோம்!
   yours sincerely,
   Visalakshi Ramani.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s