பழிக்குப் பழி?


முதுமையில் பெற்றோரைத் துறந்துவிடும்,
மக்களை எண்ணி நான் வியந்தது உண்டு!
எப்படி முடிகின்றது ஈவு இரக்கமின்றி,
இப்படி எல்லாம் செய்வதற்கு என்று!

ஒரு நாள் மனத்தில் பொறி தட்டியது;
ஒரு வகைப் பழி வாங்குதலோ இதுவும்,
சிறு வயதில் தன்னைத் தனியே விட்டுப்
பொருள் ஈட்டச் சென்ற பெற்றோர்களை?

“சிறியோர் காப்பகத்தில் விட்டுச் சென்றோரை,
முதியோர் காப்பகத்தில் விட்டால் என்ன தவறு?
பொருள் கருதியே அவர்கள் அதைச் செய்தனர்,
பொருள் கருதியே நாமும் அதைச் செய்வோமே!”

இளமையில் வறுமையும், வளமற்ற வாழ்வும்,
முதுமையில் தனிமையும், ஜனமற்ற வாழ்வும்,
இரண்டுமே மிகப் பெரிய தண்டனைகளே,
இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
அருள் இல்லார்க்கு எவ்வுலகமும் இல்லை!
பொருளும் வேண்டும், அருளும் வேண்டும்;
பொருளும் வேண்டும், குடும்பமும் வேண்டும்!

குடும்பத்துக்கு என்றும், மற்றும் தன் இனிய
குழந்தைகளுக்கு என்றும், தன் நேரத்தை
இனிமையாகப் பகிர்ந்து அளித்து வந்தால்,
இனிமை ஆகிவிடும் நமது வாழ்க்கையே.

ஒரு கண் போலக் குடும்பத்தையும் மற்றும்,
ஒரு கண் போலப் பணிகளையும் பாவித்தால்
இளமையில் வறுமையும் வரவே வராது;
முதுமையில் தனிமையும் வரவே வராது.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

A REVENGE?

I have always felt surprised and hurt when I see the aged parents forsaken by their children. How on earth can they be so cruel?

Was this a kind of revenge by the children on their parents – who had left them in the day care, in order to work and earn more money?

The same reason is valid now too. Both the spouses have to go out to earn money and the aged parents are unnecessary responsibilities!

The worst punishments in the word are poverty in one’s youth and loneliness in one’s old age.

To live a decent life man needs money. But without a trace of humanity in him, a man is no more a human! We need the money and the family i.e the man-power.

So if we work out a successful formula and devote time both for the family and for the career, neither of them will suffer nor feel neglected.

When neither of these are neglected, we will never lack money in our youth nor man-power in old age!

Advertisements

4 Responses to பழிக்குப் பழி?

 1. sridharan says:

  இந்த காலத்தில் மிகவும் சிந்தனைக்குரிய விஷயம். கவிதை வரவில்லை. எனவே கருத்தை மட்டும் சொல்கிறேன். பணம் ஒன்றே அனைவர் மனத்திலும் வியாபித்து நிற்கிறது. அதுவே இந்த நிலைக்கு காரணம். பெரியவர்களை எதிர்நோக்கியிருக்கும் வேளையில் அவர்கள் குழந்தைகளை கவனிப்பதில்லை. பெரியவர்கள் ஆன பின் அவர்கள் முதியவர்களை கவனிப்பதில்லை. கலியின் கல்மிஷங்களில் இதுவும் ஒன்று

  உலகியல் கல்வியுடன் ஆன்மிக கல்வியை இக்கால மக்கள் கற்பதில்லை. ஆன்மிக கல்வி மனதிற்கு வலிமை தரும். அதுவே சாகா வரம் தரும் கல்வி. சாகாமல் கற்பதே கல்வி என்பது ஔவை வாக்கு. தமக்கு முதுமை வரும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். பிள்ளையாயினும் பிறரை அண்டி நிற்கும் நிர்பந்தம் வாராது தடுக்க என்ன வழி என்று யோசித்து திட்டமிட வேண்டும். ராமாயணக்கதையில் என் மனதில் பட்ட கருத்து இது

  ராவணனுடன் யுத்தம் தவிர்க்க முடியாத நிலையில் ஸ்ரீ ராமன் கண்ணசைத்திருந்தால் அயோத்தியிலிருந்து மாபெரும் சேனை வந்திருக்கும். ஆனால் அருகிலிருக்கும் குரங்குப்படையை வைத்தே வென்று காட்டினார் ஸ்ரீ ராமர்.

  ஆன்மிக நெறி நின்று சிந்தித்து செயல் பட்டால் 90 வயதில் தொண்டு கிழவனாயிடினும் கண்ணசைவில் முரட்டு காளையையும் அடக்கலாம். எல்லாம் மனதின் வலிமையை பொருத்தது.இப்போதைக்கு அப்போதே சொல்லிவைத்தேன் என்று ஒரு பக்தர் சொல்லியது போல் அதற்கு நீண்ட அப்பியாசம் தேவை.

  • யாருமே யாரைப் பற்றியும் உண்மையாகக்
   கவலைப் படுவதாகத் தெரியவில்லை!
   எல்லாமே பணத்தால் அளக்கப்படுகின்றது,
   எல்லாமே பணமாகத் தரப்பட்டுக்
   கணக்குத் தீர்க்கப்படுகின்றது! 😦

 2. vl brinda says:

  இப்போது எல்லாம் காலம் மாறி விட்டது. மகன்கள் தாய் தந்தை கவனிப்பதில்லை. அதற்கு மாறாக மனைவியின் தாய் தந்தை காப்பாற்றுவதில் குறியாக இருக்கின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s