உத்தம குரு


இறையருள் பெற நாம் எண்ணும்போதே,
இறையருளால் உத்தம  குருவும்  வருவார்!
நாம்  நாடித் தேடிச் சென்றிடும்  முன்பே,
நம்மைத் தேடி வந்து விடுவார் அவரே!

உத்தம குரு  வெறும் மனிதர் அல்ல,
இறையே அந்த குரு  வடிவு எடுக்கும்!
உத்தம குருவும் இறையும் ஒன்றென
விரைவில் நாம் விளங்கிக்  கொள்வோம்.

மந்திரங்கள்  காதுகளில் உபதேசிப்பார்;
மனதில் வைராக்கியத்தை  வளர்ப்பார்;
அறிவில் விவேகம்தனை விதைப்பார்;
ஆன்மாவில் நாட்டம் கொள்ளச் செய்வார்.

ஜீவாத்மாவையும், அது அலைந்து  தேடிடும்
பரமாத்மாவையும், குரு  சேர்த்து  வைப்பார்;
பார்வை  அற்றவனுக்கு  வழி காட்டுவது போல,
நேர்மை மாறாத  நல்வழியில்  நம்மை நடத்துவார்.

கங்கையைப் போலப் புனிதமானவர் குரு;
விந்தைகள் பலப்பல புரிய வல்லவர் குரு;
நிந்தனையால்  அவர் உள்ளம் மாறுபடார்;
சிந்தனைச் சிற்பி என்பவரே நல்ல குரு.

மூன்று வகை வைத்தியர்கள் உண்டு;
மூன்று வகையினர்  குருவும் ஆவர்.
அதமம், மத்யமம்,  உத்தமம்  என நாம்,
அறியும் வகைகள் உண்டு இரண்டிலும்.

முதல் வகை வைத்தியர், நாடியைச் சோதித்து,
மருந்தை அளித்து விட்டுச்  சென்று விடுவார்.
முதல் வகை குரு நல்ல முறையில்  போதித்து,
“மகனே! இனி  உன் சமர்த்து!” என்றிடுவார்.

இரண்டாம் வகை  வைத்தியர் மருந்தை,
வற்புறுத்தி, வலியுறுத்தி உண்ண வைப்பார்.
இரண்டாம் வகை குரு, இனிய  சொற்களால்,
வற்புறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார்.

அடுத்த வகை வைத்தியர் நம்மை, “பாடு
படுத்தி”யேனும் மருந்தைச் செலுத்துவார்.
பலப்பிரயோகம்  செய்தேனும்  நம்மை,
நலம்பட வாழ்விப்பவரே ஒரு உத்தம குரு.

குருவருளும், இறைஅருளும் ஒன்றாய்க்
கூடி வரும்போது,  நம் உலக  வாழ்வில்
குறை இன்றிக் கோரினவை கைக்கூடும்.
குருவை வரவேற்கத்   தயாராகுங்கள்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE BEST GURU.

When we are ready to receive the divine grace of the God, out sat guru appears in front of us! Even before we set out searching for him, he himself comes looking for us!

Guru is not just any ordinary human being. Guru is the personification of God Himself. We will realize very soon that Guru and God are one and the same.

Guru initiates us with a mantra. He teaches us Viveka – the discerning power- and makes us develop our Vairaagya. He helps us evolve spiritually and try for Atma dharshan.

Guru forms a bridge between the restless jivatman and its final abode the Paramatman. Just like a kind man leading a blind man our Guru leads us in the right path towards God.

Guru is as venerable a Ganga. He does not get hurt by thoughtless comments. He shapes our thinking process.

There are three kinds of doctors – the Good, the Better and the Best – going from the bottom to the top! There are three types of gurus in the same order.

The first type of doctor diagnoses our ailment, prescribes the medicine and goes away. The first type of Guru preaches us well but leaves us to develop and progress on our own.

The second type of doctor diagnoses, prescribes and makes us take the medicines in his presence. The second type of Guru teaches us, clears all out doubts and makes sure we progress satisfactorily.

The third and the best doctor puts the bitter medicine down our throat, using physical force if necessary. The Uthama guru does the same thing. He makes sure that we progress satisfactorily even if he has to apply pressurizing techniques.

When the grace of God and Guru descend on us, is there anything that we cannot achieve in this world? Get ready for your Guru. He will come to you only when you are really ready to receive him!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s