உருவமும், பிறவியும்


ஒவ்வொரு பிறவியில், ஒவ்வொரு உருவம்;
ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு அறிவு.

ஏன் இந்த மாற்றம்?  ஏன் இந்த ஏற்றம்?
ஏன் இந்த வடிவம்? ஏன் இந்த அறிவு?

நாம் செய்யும் செயல்களைக்  கண்டும்,
நாம் எண்ணும் எண்ணங்களைக்  கொண்டும்,

இறைவன் வகுக்கிறான் நம் அடுத்த பிறவியை,
உடலை, அறிவை;   நம் வடிவை,  செயலை.

இசையை விரும்பிக் கற்க நினைப்பவன்,
இசைக் குடும்பத்தில் வந்து பிறக்கிறான்.

ஈசனை அறியும் ஞானம் விழைபவன்,
யோகியர் சுற்றத்தில் வந்து பிறக்கிறான்.

“உண்ணுவதே தொழில்!”, என்று  இருப்பவன்,
ஊன் வளர்க்கும் ஒரு விலங்காய்ப் பிறக்கிறான்.

“உடல் போகமே என் யோகமே!”, என்று திரிபவன்,
கடைத்தேற முடியா  இழி பிறவி எய்துகிறான்.

வஞ்சக நெஞ்சகம் கொண்டு வாழ்ந்தவன்,
நெஞ்சுரம் இல்லா நரியாய்ப் பிறக்கிறான்.

எச்சிலை உண்டு வாழ்ந்து  மகிழ்ந்தவன்,
மிச்சம் இல்லாதுண்ணும் காக்கை ஆகிறான்.

ஒருவர் சொத்தை ஏய்த்துப் பறித்தவன்,
கரையான் புற்றில் பாம்பாய் வாழ்கிறான்.

பணத்தைச் சேர்த்துப் புதைத்து வைத்தவன்,
புதையல் காக்கும் பெரும் பூதமாக  ஆகிறான்.

மனித நேயத்துடன், மனிதனாக வாழ்பவனே,
மனிதனாகப்   பிறக்கும் வாய்ப்புப்  பெறுகிறான்!

வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படுவர் அல்லவா?

இப்பிறவியில்  மனிதராய்  பிறந்துள்ள   நாம்,
மறுபிறவியில் தெய்வமாக மாற முயலுவோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE FORMS WE ASSUME.

In every birth a man gets a new form, a new shape, a new name and a new intelligence!

What causes these differences and who decides the future birth of a person?

God decides the a person’s future birth, his shape, his form, his intelligence and his course of actions, depending on these very factors exhibited in his present life.

One who wishes to learn music will be born in a family of musicians. The one who wishes for self realization will be born in the family of yogis.

One who has spent his entire life in procuring food and eating it relentlessly will be born as an animal which will be fattened for the sake of its flesh.

A man who spent his entire life in seeking and enjoying carnal pleasures will be born as a shameless animal which can indulge in such activities all the time.

A cunning person will be born as a fox; the man who eats the left over and spoiled food will be reborn as a crow – ‘the scavenger of the sky’.

The person who steals what does not belong to him will be born as a snake in an ant hill. One who hoards his wealth by living the life of a miser will be reborn as a gene to guard his own buried treasures.

Only a person who lives his life as a human being should, is reborn as a human being. If he lives a life of righteousness and justice he will be placed among Gods.

We are born as human beings. Let us strive to reach the level of God in the next birth by living a pure and God-oriented-life now

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s