காரண வாரணன்


அகில உலகுக்கும் காரணன்;
அவன் ஒரு அழகிய வாரணன்!
அதிசயக் கருநிற அழகன்.
அதனால் அவன் ஒரு வாரணன்!

வெண்ணை பால் தயிர் எல்லாம்
வஞ்சனை இன்றி உண்டதாலே,
கண்ணனும் ஒரு வாரணம்,
குஞ்சரம் போலத் திகழ்வதாலே!

நேரம் போவதே தெரியாமல்
நின்று ரசிப்போம் வாரணத்தை,
நேசம் மிகுந்த காரணனோ
நினைவையே மறக்கடிப்பான்!

கன்றினில் எல்லாமே அழகு,
குன்றை போன்ற வாரணமுமே.
என்றென்றும் நிஜ அழகன்
என் கண்ணன், அவன் மட்டுமே!

பட்டு துகில் உடுத்தினாலும்,
புழுதி  படிய விளையாடுவான்.
பட்டுப்போல்   குளித்த பின்னர்
புழுதி வாரிச் சொரியும்  வாரணம்!

அவன் வாய் மொழிகளே ஆரணம்;
அவன் ஒரு கற்பக  வாரணம்;
அவனே ஸ்ருஷ்டிகளின்  காரணம்;
அவன் அருள் என்றும் நாம்  கோரணும்!

அவன் திவ்ய பரி பூரணன்;
அவனே  உயர் திரு  நாரணன்!
எல்லாவற்றுக்கும் வேர் அவன்;
ஆயிரம் நாமத் தோரணன்!

எட்டு திக்கினுள்ளும் சென்று
எங்கெங்கு  தேடினாலும்,
தட்டுப்பட மாட்டான்,  இன்னொரு
காரண வாரணக் கண்ணன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

KAARANA VAARANA KANNAN.

He is the cause of this world;

He is a beautiful VAranam;

He is pretty and dark colored;

So He is a beautiful VAranam.

He has became a kunjaram by eating butter, curd and milk to His heart’s delight.

We can spend hours at a stretch, watching a magnificent elephant.

The magnificent KAranan will steal our hearts and intellect!

All calves are pretty, even that of an elephant. but the only real beautiful person is our Krishnan.

Decorated with silk clothes after having his bath, He will go and play in mud and sand.

When bathed clean, the elephant will shower itself with dirt and mud.

His words form the Aranam;

He is a karpaga VAranam;

He is the srushti KAranam;

His blessings are to be sought;

He is the only pari pooranan;

He is the all powerful NAranan;

He is the root of everything;

He wears a garland of 1000 names;

We may seek and search all over the world,
but we will not find another KArana VArana Krishnan.

Advertisements

2 Responses to காரண வாரணன்

 1. Sridharan says:

  கண்ணனை கருத்தில் வைத்தால் காணாத அதிசயங்களை காணலாம். நடக்காது என்று நினைப்பதெல்லாம் நடக்கும். உதாரணம்

  ஈ உட்கார மலை அசையுமா? அசைந்ததே ….பாருங்கள் இங்கு

  வாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும்
  தாரணி எல்லாம் சலித்தனவால் …நாரணனை
  பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த
  புண்வாயில் ஈ மொய்த்தபோது

  இது கண்ணன் பெருமையா இதை சொன்ன கவி காளமேகத்தின் கற்பனை வளத்தின் பெருமையா….இரண்டுமே…நம் கலாச்சாரத்தின் பெருமைகள் அன்றோ?

  • ஈசன் முதுகில் பட்ட பிரம்படி
   ஜகம் முழுவதும் படும் என்றால்
   ஈ அமர ஏன் மலை அசையாது?
   ஈ அமர்ந்து கண்ணன் மேல் அல்லவா? 🙂

   கவிதை நயத்துடன் விமர்சிக்கும் உங்கள் பாணியே தனி!
   இவைகளையும் படித்துவிட்டு விமர்சிப்பீர்களா??

   உங்கள் வரவு நல்வரவு என் வலைத் தளத்துக்கு! 🙂
   http://visalakshiramani.weebly.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s