குழந்தையும், ஞானியும்


குழவியும், ஞானியும் மனத்துக்கினியவர்;
குழப்பமில்லாத  தெளிந்த  மனத்தினர்!
ஏதும் அறியாக்  குழந்தையும்  இனியது;
எல்லாம் அறிந்த  ஞானியும் இனியவர்.

நான், எனது என்ற எண்ணங்கள்
இல்லை இவர்கள் மனங்களிலே;
நன்மைகள் பல, வாழ்வில் தரும்
நல்ல குணம் ஒன்று, இதுவன்றோ  ?

கோபம் வந்தால் ஒரே நொடியில்
மறந்து சிரிக்கும்   குழந்தையே;
கோபமே என்றும் கொள்ளார்
சிறந்த ஒரு மெய்  ஞானியே.

யாரைக் கண்டு உலகம் மகிழுமோ,
அது தான் ஒரு சிறு  குழந்தை!
யாரைக் கண்டு உலகம்  மதிக்குமோ,
அவர் தான் மெய்  தத்துவ  ஞானி!

செல்லும் இடங்களில் எல்லாம்
இன்பம் பரப்பும்   சிறு குழந்தை;
செல்லும்  இடங்களில் எல்லாம்
அன்பைப் பரப்புவார்   ஒரு ஞானி.

மனதை அடக்கி மாதவம் செய்து,
ஞானி ஆவது மிகவும்  கடினம்;
மன இருள் அகற்றி கள்ளமில்லாக்
குழந்தை போல ஆவது மிகவும்  எளிது!

வஞ்சனையும் சூதும் இன்றியே,
வையகம் வாழ்ந்து மகிழ்ந்திட;
நாம் பிஞ்சுக்  குழந்தைகள் போல,
நம் நெஞ்சினை மாற்றிடுவோம்.

பஞ்சம் இல்லாத அன்பை நம்
நெஞ்சில் விதைத்து, விளைத்து,
கனிவு கொண்டு மகிழ்ந்தவாறே,
இனிதே வாழ்ந்திடுவோம் நாம் !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE INNOCENT AND THE ENLIGHTENED.

A Gnaani and a baby are both good natured and sweet tempered. They are not subjected to any delusions and confusions. The child is sweet since it completely innocent, ignorant and knows nothing . Gnnani is sweet since he knows everything.

Neither the baby nor the Gnnani has any thoughts related to “I” and “Mine”.These two qualities bring a lot of joy in our lives.

The baby forgets its anger within seconds and smiles sweetly. The Gnaani will never get angry for any reason. The one whom the whole world loves is a baby. The one whom the whole world respects is s Gnaani.

The baby wins over the love of everyone it meets. The Gnaani wins over the respect of everyone he meets. The baby spreads happiness wherever it goes. The Gnaani spreads knowledge wherever he goes.

For ordinary people, it is very difficult to control the mind, do penance and become a Gnaani. But giving up Ego and Pride and becoming child-like in the heart is much more easier.

Let us all become lovely and lovable like children. Let us give up pride and ego. Let us become humble and simple like the children and and live a happy and peaceful life.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s