கண்ணன் அருள்


கண்ணன் என்றால் கருணையும், கனிவும்.
காண்போர்க்கெல்லாம் இனியவன் அவனே.
சாம, தான, பேத, தண்டம் என்று,
சாதுரியமாக  அருள்  புரிபவனே.

பக்தர்களைக் கொண்டருளும் அவன்,
பகைவர்களைக் கொன்றருள்வான்.
பார்ப்பதற்கு இரண்டும் வேறுபட்டாலும்,
பயனளவில் இவ்விரண்டும் ஒன்றே!

கொண்டாலும், கொன்றாலும், அவன்
கொண்டல் வண்ண மேனியுடன்,
கூடும் நற்பயன் தானே கூடிவரும்.
நாடும் நற்பயன் வேறென்ன உண்டு?

அன்று மடுவில் பொற்றாமரை பறித்து,
குன்று குடையாய் எடுத்த கோமானுக்கு,
கொடுக்க எண்ணிய யானை கஜேந்தரனை
கடித்து,  துடிக்கச் செய்த முதலையை,

கருடாரூடனாய் விரைந்து வந்து, அந்தக்
கரியினைக் காத்து,  முதலையைக் கொன்று,
கொண்டருளியும், கொன்றருளியும் அவர்க்கு
விண்ணுலகு அளித்தான், வேணு கோபாலன்.

வஞ்சனை செய்து கண்ணனை அழிக்க,
கஞ்சன் என்போன் மனப்பால் குடித்து,
குவலயா பீடம் என்ற  குன்று  நிகர்த்த
குவலயம்  காணா மதக் களிற்றினை,

கொண்டு முடித்திட எண்ணம் கொண்டான்.
கொன்று முடித்தான் கண்ணன் களிற்றினை!
உயிருடன் உள்ள யானையின் தந்தத்தின்
உயரிய முத்துக்கள் ராதைக்கு பரிசு.

கிடைப்பதற்கரிய வானுலகப் பதவி,
கம்ச, சாணூர, குவலயா  பீடத்திற்கு!
பக்தியால் கிடைக்கும் அற்புதப் பரிசு,
பகைமையால்  கிடைப்பது விந்தை அன்றோ?

நவ வித பக்திகள்  இறைவனை அடைய;
நன்மையே  தரும் அவை ஒன்பதுமே!
கொண்டும், கொன்றும், அருளும் கண்ணன்,
கொண்டு செல்வான் நம்மை, பரமபதத்திற்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.


THE GIFT OF KRISHNA.

The word KrishnA goes with the adjectives Kindness and Sweetness. No one can dislike Him at all! He blesses His devotees and punishes His enemies. The result of both the actions are one and the same! It is merging with Him for ever and ever.

When the elephant King GajEndrA offered a lotus flower to KrishnA, a wicked crocodile caught hold of its leg and they struggled for a long time. When the elephant called out Lord’s name as “AdhimOlamE” He rushed to the spot on Garuda VAhanA and killed the crocodile. Both Gajendra and the crocodile were restored to their original glory by Lord.

KamsA wanted to kill KrishnA with the help of an elephant KuvalayApEdA- which was as big as a mountain. But KrishnA broke its tusks and presented the rare pearls found in it to RAdhA. He killed the elephant and the two wrestlers ChAnUrA and MallA. All the three were liberated.

There are nine forms of bhakthi and all the nine are equally good in taking us nearer to God and uniting us with Him.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s