சான்றோர் சகவாசம்


சாதனை படிகளில் ஒருவர்  முன்னேறிட,
சான்றோர் சகவாசம் தேவை அவசியம்;
ஒத்த கருத்து உடையவர்களின்  நட்பு,
மெத்தவும் நன்று, சித்தம் தெளிந்திட.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,
நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.
நல்லவர்  நட்பு  நம்  நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.

சுடர் விளக்குக்கும்  ஒரு தூண்டு கோல் வேண்டும்,
சுடும் நெருப்புக்கும், ஒரு ஊதுகுழல் வேண்டும்,
கரும்புகையை  விரட்ட, ஒரு கை விசிறி வேண்டும்,
இரும்பை உருக்கவும், ஒரு துருத்தி வேண்டும்.

பற்றினை ஒழிக்கும், நல்லவர்கள்  நட்பு.
பற்று ஒழிந்தவனின் மன மயக்கம் மறையும்;
அமைதி அடைகின்றான், மயக்கம் ஒழிந்தவன்,
அமைதி அடைந்தவனே, முக்தி அடைகின்றான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

SAT SANG.

To evolve spiritually, we need sat sang or the association with the Saatvic people and the Sadhu. The association of like minded persons is very important for the Saadaka to evolve spiritually.

The world we live in is over flowing with several problems, difficulties and distractions. At times one’s mind gets distracted and one’s efforts become diluted like milk mixed with water.

A pot kept in the air becomes completely dry. But a pot inside water never becomes dry. In the same way, when the mind is immersed in the association of good people, it does not get distracted or disturbed. It remains good natured and well focused.

Even the brightest lamp needs occasional trimming of its wick!
Glowing charcoal needs occasional blowing of of air.
The thick black smoke can be dissipated only by using a hand fan.
The blacksmith needs a blow of bellows to melt the iron.

Sat Sang helps a person to come out of Raga and Dwesha – likes and dislikes.

Persons who have come out of Raga and Dwesha come out of their delusions.

Persons out of their delusions acquire equanimity of the mind.

Persons who have acquired equanimity are fit to try for mukti
or liberation from bondage.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s