மனோ பாவனைகள்


அன்பு செய்வதில் உண்டு பலவகைகள்;
அன்பின் ஒரு வெளிப்பாடே பக்தியாகும்.
மறைகள் ஏற்றுக்கொள்ளும் வழிகளில்
இறைவனிடம் நாம் அன்பு செய்ய இயலும்.

“சாந்த பாவ”த்தில் பக்தி செய்பவர்கள்
சாந்தமாகவே என்றும் காட்சி அளிப்பர்;
கங்கையின் மைந்தன் பீஷ்மரைப் போல
கனிந்த பக்தியின் ஒரு உருவம் ஆவர்!

“தாஸ்ய பாவ”த்தில் பக்தி செய்வோர்கள்
தாசனாக இருப்பதில் மகிழ்ச்சி அடைபவர்;
அனுதினம் தொண்டுகள் செய்து கொண்டு
அனுமனைப் போலவே வாழ்ந்திடுவர் இவர்.

இறைவனைத் தனது உற்ற தோழனாகவும்,
இறைவனைத் தனக்கு ஒத்தவனாகவும்,
எண்ணி அவனிடம் அன்பு செய்வர் சிலர்
பாண்டவர்கள் போல “சக்ய பாவ”த்தில்.

தாயும் தந்தையும் ஆன இறைவனுக்கு
தாயாகத் தானே ஆனது போல் எண்ணி,
வாஞ்சையுடன் தாய் போல அன்பு செய்பவர்
“வாத்சல்ய” பக்தர்கள் யசோதையைப் போல.

உயர்ந்த பக்தியின் பாவனை இதுதான்;
உலகத்தின் தன்னிகரற்ற தலைவனை,
உண்மைக் காதலனாக எண்ணி ஏங்கி,
உருகிப் பிரிவால் வருந்தி வாடி நிற்பதே!

ஒரு இளம் பெண்ணாக ஜீவாத்மாவையும்,
விரும்பும் காதலனாகப் பரமாத்மாவையும்,
உருவகிக்கும் “மாதுர்ய பாவ” பக்தியில்
சிறந்தோர் மீரா, ஆண்டாள், ஜெயதேவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

MENTAL ATTITUDES OF BHAKTAS.

Love expresses itself in various forms. The intense love for God is bhakti. It is expressed differently depending on the mental make up of the bhaktAs.

BhaktAs of S’Anta bhAvam are peaceful, unperturbed, ripe and sweet like BhEshma pitAmahar.

BhaktAs in ‘DAsya BhAvam’ imagine themselves as the servants of God and are quite happy with their lot.They find happiness and satisfaction in serving God. HanumAn is the best example for DHAsya BhAvam.

BhaktAs in ‘Sakhya BHAvam’ imagine themselves to be close friends of God. PAndavAs are the best examples for this bhakti bhAvA.

BhaktAs in ‘VAtsalya BhAvam” imagine themselves to be the parent of God Himself and love Him as a parent does his / her child. The best examle for this kind of Bhakti bhAvam is YasOdA.

The best bhakti BHAvam is ‘MAdhurya BhAvam’. In this bhAvam the Lord is imagined as the lover and the bahthA as the girl pining for her lover. The paramAtmA is personified as the lover and the JeevAtma as the lovelorn lady. The bhaktAs who have excelled in this bhAvA are MeerA, AndAl and Jeya Dev.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s