பக்தியும், பகைமையும்


பக்தியும், பகைமையும் மாறுபட்டாலும்,
முக்தியை  அளிப்பதில், அவை சரிசமமே.

அவை இரண்டும் எதிர்ப் பதங்களே – ஆயினும்
அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே.

அதீத விருப்பம் பக்தியில் முடியும்;
அதீத வெறுப்போ பகையில் முடியும்!

கண்ணன் மேல் கொண்ட பக்தி  பெரியதா?
கண்ணன் மேல் கொண்ட பகைமை பெரியதா?

நூறு பிறவியில் கொள்ளும் பக்தியும்,
மூன்று பிறவிகளில் கொள்ளும் த்வேஷமும்,

சரிசமம் ஆகும் தராசுத்  தட்டில்;
சரிதான் மாயக் கண்ணன் கணக்கு.

நாம் விரும்புபவர்களை,  அவ்வப்போது
நாம் விருப்புடன் கொஞ்சம் நினைப்போம்.

நாம் வெறுப்பவர்களையோ,  நெருப்பென
நம்  நினைவில் இடைவிடாது  கொள்வோம்!

எப்படி நினைத்தால் என்ன கண்ணனுக்கு?
எத்தனை நேரம் நினைக்கிறோம் என்றே,

கணக்கு வைத்துக்கொண்டு  மனம் கனிவான்;
கணக்கு முடிந்தவுடன்,  கருணை பொழிவான்.

பக்தியும், அன்பும் அடைவிப்பது போன்றே,
பயமும், பீதியும் அவனை அடைவிக்கும்.

“எப்படியோ என்னை நினைத்தாலே போதும்”,
என்றே கண்ணன் எண்ணுகின்றான் போலும்!

விருப்பு  வெறுப்புக்கு அப்பாற்பட்டவன்
வேறு எப்படித்தான் எண்ண முடியும்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

AFFECTION AND ANIMOSITY.

As far as ‘Mukthi’ is concerned ‘bakthi” and ‘dwEsham’ are equal, in all

respects. They look like opposite words, but they are the two sides of

the same coin!

Extreme love culminates in ‘bhakti’ and extreme hatred in ‘dwEsham’.

Which of these is superior? Bhakti to krishnA or dwEsham to Him?

Bhakti in a hundred births is equal to the dwEsham in three births!

This is true according to the time scale of KrishnA.

We remember the person whom we love now and then; but we remember

the person whom we hate – like a constant fire kept alive in the mind.

Krishna does not bother about the emotions accompanying our thoughts-

since He is beyond rAgA and dwEshA. When we fulfill the time

requirement, He showers His blessings on us.

Isn’t it strange that Bhayam and BhEthi work in the same way as

Affection and love in winning MOkshA?

Advertisements

2 Responses to பக்தியும், பகைமையும்

  1. vl brinda says:

    bhakthi creates affection in our mind towards others and dwesam creates frustration and hard behaviour towards others. so bhakthi should be developed to build our character.

  2. Bhakti makes a person gentle where as animosity unleashes the animal hiding in him! 😦
    Bhakti is born out of Raagaa and animosity out of Dwesha.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s