பரிணாம வளர்ச்சி


டார்வின் கண்டு அறிந்து சொன்னார்,
உலகில்  பரிணாம வளர்ச்சியினை;
பரமன்  நமக்குச் செய்தே காட்டினான்,
உலகில்  பரிணாம வளர்ச்சியினை!

முன்னர் நீரில் உயிரினம் தோன்றியது;
பின் நீரிலும், நிலத்திலும் வாழ்பவை;
தரையில் வாழ்பவை என உயிரினங்கள்,
தர வரிசைப்படி தோன்றின என்பார்.

மறைகளைக் காப்பதற்கு இறைவன்,
நீரில் வாழும் மீனாய்த்  தோன்றினான்.
மந்தர மலையைத்  தாங்கிப் பிடிக்க,
நீர், நிலம் வாழும் ஆமை ஆனான்.

பூமியை மீட்டு, முன் போல் நிறுத்த,
பூமியில் வாழும் வராகமானான்.
மிருகமும், மனிதனும் கலந்த ஒரு
உருவமாக   நரசிம்மன் ஆனான்.

குறு மனிதனாய் வாமனனாகி, பின்
முழு வடிவில் பரசுராமன், ரகுராமன்,
கண்ணன், பலராமன் என்பவர்களாக,
கண் நிறையும் படி அவதரித்தான்!

அரிய  ஆராய்ச்சியால்  டார்வின் அறிந்ததை,
புரிய வைத்தான் எளிதாய்  நம் இறைவனே!
விஞ்ஞானிகளுக்குள் எல்லாம் மிகப் பெரிய
விஞ்ஞானியும், மெய்ஞானியும் அவன்தானே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

CREATION AND EVOLUTION.

Scientists postulated the theory of Creation and Evolution.

God had enacted it in his dasa avatArs.

The theory states that the first form of live appeared in water. It was followed by the amphibians – which can live in water and on land. Then came the land living animals followed by human beings.

To protect the VEdAs God appeared as a giant Fish – a water living organism.

To support the Mandhara giri during Amrutha mathanam, He aasumed the form of a giant tortoise- an amphibian which can live on land and in water.

To recover the earth from under water, He became VarAhA Moorthi – a land living animal.

The next avatAr was the half lion and half man- Narahari.

This was followed by the vAmana avatAr, where He is a short boy. The following avatArs were full grown powerful men namely Parasu RAmA, Raghu RAmA, BalarAmA and KrisnhnA.

What scientists have proved with great difficulties, God has demonstrated by his avatArs so easily.

He is the greatest of all great scientists and great GnAnis.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s