பிரம்மம், மாயை


நிறைந்த சக்தியே பிரம்மம்; அதன்
சிறந்த வெளிப்பாடே மாயை ஆகும்!

இயங்காத  சக்தி என்பது  பிரம்மம்;
இயங்கும் சக்தி  என்பது மாயை!

சலனமற்றது பிரம்மம் என்றால்,
சலனம் உடையது  மாயை ஆகும்!

எரியும் நெருப்பு பிரம்மம் என்றால்,
எரிக்கும் சக்தி அதன் மாயை ஆகும்!

பிரம்மம் ஒரு முப்பட்டைக் கண்ணாடி;
பிறக்கும் வர்ண ஜாலமே  மாயை ஆகும்.

படைப்புகளுக்குக் காரணம் பிரம்மம்;
படைப்புகள் என்னும் காரியம்  மாயை.

காண முடியாதது பிரம்மம் ஒன்றே;
காணும் பொருட்கள் எல்லாம் மாயை!

என்றும் தனித்து நிற்கும் பிரம்மம் ;
என்றும் மனத்தை மயக்கும் மாயை!

தோற்றம் இல்லாதது  பிரம்மம் என்றால்,
தோன்றி ஒடுங்குவது அதன் மாயை!

பாலும் நீரும் போலக் கலந்த இவற்றை,
பரமஹம்சர்களே பிரிக்க வல்லவர்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

BRAHMAN AND MAYA.

The sum total of all power is Brahmam;
The expression of the power is MAYA.

The Energy stored is Brahmam;
The Energy spent is MAYA.

The Immovable power is Brahmam;
The Power in motion is MAYA.

If a fire can be equated to Brahmam;
Its capacity to burn is equated to MAYA.

If a prism can be equated to Brahmam;
Its spectrum can be equated to MAYA.

If Srushti kAranam is Brahmam;
Then Srushti kAriyam is MAYA.

What lies beyond our sight is Brahmam;
Everything within our eye sight is MAYA.

That which remains aloof is Brahmam;
That which expresses itself is MAYA.

That which is neither born nor destroyed is Brahmam;
That which is born and gets destroyed is MAYA.

Brahmam and MAYA are mixed like milk and water.
Only a Parama hamsA can separate the two,
In the same way a hamsA separates milk and water.

Advertisements

7 Responses to பிரம்மம், மாயை

 1. Sridharan says:

  பாலும் நீரும் போலக் கலந்த இவற்றை,
  பரமஹம்சர்களே பிரிக்க வல்லவர்.
  அருமையான கருத்து

 2. Sridharan says:

  விளக்கை ஏற்றி வெளியை அறிமின்
  விளக்கின் முன்னே வேதனை மாறும்
  விளக்கை விளக்கும் விளக்கை அறிவார்கள்
  விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே………………. (திருமூலர்)

  வெளி…..பிரம்மம்…..ஒளி ….மாயை விளக்கை விளக்கும் விளக்கு….பரம ஹம்சர்கள்.

 3. Sridharan says:

  இந்த திருமந்திரத்தின் முழு பொருளையும் உள்ளடக்கி மேதை காட்டும் பாதை என்ற பெயரில் ஒரு நூல் எழுதலாம் என்று இருக்கிறேன். தங்களின் ஆசி தேவை. ஒரு மேதையின் அருட்பார்வை பட்டு அம்பிகையின் அருள் வெள்ளத்தின் ஒரு சிறு பகுதியை ருசித்துப்பாற்கும் சாமானியன் நான் தாயே.

  • திருமந்திரம் என்னுடைய அடுத்த குறிக்கோள் மேற்கோள் காட்டிட.
   முன்பு ஒரு முறை படித்தேன். மறுமுறை படித்தால் நன்கு மனதில் பதியும்
   .tamilbrahmins.com என்னும் வலைத் தளத்திலும் எழுதுகின்றேன்.
   உண்மையில் நீங்கள் யார் என்று அறிய விரும்புகின்றேன்!
   நிச்சயமாக நீங்கள் ஒரு வெறும் சாமானியராக இருக்கவே முடியாது.
   ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா?
   இனம் இனத்தை இனம் கண்டுகொள்ளும் என்பதும் உண்மை அல்லவா?

  • தங்களுக்கு ஆசி வழங்கும் தகுதி எனக்கு இல்லை.
   அம்பிகையே அருள்வாள் அதனை உங்களுக்கு!

   சாட்டையில்லா பம்பரமாக நம்மை
   ஆட்டிவைப்பவள் அவள் அல்லவா ?

   நாம் வெறும் மரப் பொம்மைகள்.
   அவள் கரங்களில் வெறும் கருவிகள்.

   அவள் கரங்களில் நம்மையே அளித்துவிட்டால்
   அவளே அழைத்துச் செல்வாள் சரியான பாதையில்.

   தங்கள் நூல் பேதைகளுக்குப் பயன் அளிக்கும்
   என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை.

   வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு தேவியின் அருளுடன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s