புலன்கள், பொறிகள்


புலன்  என்பது நல்ல  வயல் வெளி.
புலப்படும் பொருட்களை எல்லாம்
வளரச் செய்யும் ஒரு வயல் வெளி;
மலரச் செய்யும் ஒரு மண் வெளி.

“வெளி”யினில் ஒலியை வைத்தான்.
“வளி”யினில் உணர்வை  வைத்தான்.
“ஒளி”யினில் வடிவம்  வைத்தான்.
ஓடையில் சுவையை வைத்தான்.

மண்ணிலே மணத்தை வைத்தான்.
மனதிலே ஆசைகள்   வைத்தான்.
எண்ண எண்ணத் தொலையாத,
இன்பங்கள் உலகில் வைத்தான்.

உணர்வுக்கு உடலை, ஓசைக்கு செவியை,
மணத்திற்கு நாசியை, சுவைக்கு நாவை,
வடிவுக்கு கண்களைத் தந்து, ஆக்கினான்
வடிகட்டிய முட்டாள்களாக நம்மை.

எலியைப்  பிடிக்கும் பொறியைப் போல,
எமக்குள்  வைத்தான் ஐந்து  பொறிகளை.
புலியின் பலம் கொண்டவைகள் அவை;
புரட்டிப்  புரட்டிப் போடுகின்றன நம்மை!

ஒளியைக் கண்டு உவந்து வந்து, அந்த
ஒளியிலேயே   மடியும்  விட்டில் பூச்சி!
இசைக்கு மயங்கி நெருங்கும்  மானோ,
இசைக்கும்  வேடனுக்கு இசைந்த  உணவு!

சுவைக்கு மயங்கி வரும் மீனோ, அதன்
சுவை  கண்டவருக்கு உணவாகிவிடும்!
சுகத்தில் மயங்கி வரும் யானையோ
சுதந்திரத்தை  இழந்து சிறைப்படும்.

ஒரு பொறியாலே உயிர் போகும் எனில்,
ஐம்பொறி வசப்பட்ட நம் கதி என்ன?
நினைக்க நினைக்க மனம்  தான்   பதறி,
நனைக்கும்  பெருகும்  கண்ணீர் அருவி!

கண்ணொரு பக்கம்,  நாவொரு  பக்கம்,
காதொரு பக்கம்,  உடல் ஒரு பக்கம்,
அறிவொரு பக்கம்,  மனமொரு பக்கம்,
தறி கெட்டு  ஓடும்  குதிரைகள் ஆனால்….

ஐம் புலன்கள்  இருந்து   என்ன பயன்?
ஐம் பொறிகள் இருந்து  என்ன பயன்?
எல்லாம்  தந்தும், எதுவும் பயனின்றி,
செல்லாக் காசாய் நம்மை ஆக்கி வைத்ததேன்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE SENSE ORGANS.

The Pancha Gnaana Indriyaas viz Eyes, Ears, Nose, Tongue and Skin help us gain knowledge of the external world. The world is a large fertile field which abounds in the food for these Indriyasa!

The Space contains the element of Sound in it. The Wind holds the element of Touch in it. The Light contains the elements of Form and Shape in it. The water contains the element of taste and the earth the different odors.

Human mind overflows with desires. The objects of desires can neither be counted nor be thought about exhaustively by us. The body craves for the pleasure of “Touch”; the nose craves fro different fragrances; the tongue for different tastes.

The ears crave for pleasing sounds and the eyes for beautiful forms. Being torn asunder by these powerful cravings, we become powerless victims in their clasp.

A trap is set with a nice piece of snack or roasted coconut, in order to catch a rat. In the same way the five powerful traps have been set in our body in the name of these Indriyaas. They may look as meek and mild as five rats but they are wilder and more powerful than five ferocious tigers.

A moth is attracted by a bright light. It goes for the captivating light only to get charred by it. The deer is fascinated by the music the hunter plays and gets caught by him. The fish goes for the bait in the hook and ends up in the menu of the fisherman. Elephant bulls are interested in the proximity of the elephant cows and end up becoming life long slaves.

If even one sense organ can cause such a calamity, what chances does a man-who is a slave of all his five senses- stand?

The very thought is enough to make a person realize the helpless situation he lives in and shed tears of despair.

The eyes drag the person in one direction, the nose in another, the ears drag him in another direction, the body and tongue in two other directions. The intellect and the mind also join the crowd to do as much damage as they can! What will be the plight of a man at the mercy of so many raging horses at the same time?

God has endowed man with everything good. But instead of making him a maser of his senses, God has made man a slave to his senses.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s