யோக சக்தி


அஷ்டாங்க யோகம் என்பதை முறையாக
இஷ்டத்துடன் செய்து வரும் யோகிகள்,
அடைவர் பலவித சக்திகள்; அவர்களை
அடைவிக்கும் அவைகள் உயர் நிலைக்கு.

மூன்று காலமும் உணரும் சக்திகளை
முழுமையாக அவர் அடைந்திடுவர்;
முகத்தைப் பார்த்தவுடனே மனதில்
முழுவதும் திரைப்படம் போல ஓடும்!

எதிர்மறைப் பொருட்களையும் அவர்
எதிர்மறையாக என்றும் உணரார்;
வெய்யிலும், மழையும் அவர்க்கு ஒன்றே!
வெப்பமும், குளிரும் அவர்க்கு ஒன்றே!

மற்றவர் மனத்துள் புகுந்து அங்கே
மறைந்து கிடக்கும் அனைத்தையும்,
மிச்சமின்றிக் கண்டு அறிந்து கொள்ளும்
அச்சம் தரும் சக்தியும் அவர்க்கு ஏற்படும்!

இயற்கையில் விளங்கும் பலவிதமான
இயக்க முடியாத பொருட்களையும்,
ஆதவன், நெருப்பு, நீர், விஷங்களையும்
ஆற்றலுடன் தம் வசப்படுதுவர் இவர்.

தனக்கு தானே எஜமானன் என்பது போல
நினைத்ததைச் செய்ய வல்லவர் இவர்;
பிறர் மனத்தை அறிய வல்லவரான
இவர் மனத்தை யாரும் வெல்ல முடியாது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

YOGA SAKTHI.

A yOgi who has mastered the ashtAnga yOgA in the prescribed manner with devotion and determination, will gain many special mental powers. He will be elevated to a higher level of consciousness than the normal men.

A yOgi can know the past as well the future of a person he meets. Every single detail about the person will be revealed to the yOgi.

A yOgi is not bothered by the pairs of opposites found in nature. Rain and Sun are one and the same for him. Heat and cold are one and the same for him. A Yogi will possess this frightening power . He can enter any person’s mind and dig out all the secrets burried there.

A yogi can control many natural factors by his yOgic power. He can control the Sun, Fire, water and poison. A yOgi is his
own master. He can do what he wishes to do. A yOgi can contol and read everyone’s mind. No one can read or control a yOgi’s mind.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s