ராமனும், கண்ணனும்


ராமனும் கண்ணனும் அவதாரங்களே!
ஆயினும் அவர்கள்  வேறுபட்டவர்களே!

சீரிய மனையினில் பிறந்தவன்  ராமன்;
சிறைச் சாலையினில்  பிறந்தவன் கண்ணன்.

இளமையில்  வளமாய் வாழ்ந்தவன் ராமன்;
இளமையில் ஒளிந்து வாழ்ந்தவன் கண்ணன்.

அரசிளங் குமரன் ராமன் என்றால்,
ஆவினம் மேய்ப்பவன் கண்ணன்.

மிக மிக குறைவாய் பேசுவான் ராமன்;
மிக மிக அதிகம் பேசுவான் கண்ணன்.

சத்தியம் ஒன்றே பேசுவான் ராமன்;
சத்தியம் என்பதே   கண்ணன் பேச்சு!

ஜயஜய எனவே  வாழ்த்தினர் ராமனை;
ஜெயித்துக் கொல்ல முயன்றனர்  கண்ணனை.

நண்பர்களை என்றும்  கை விடான் ராமன்;
நகர்ந்து சென்று கொண்டே இருப்பான் கண்ணன்.

பெண்களைக் கண்டால் விலகுவான் ராமன்;
பெண்களைக் கண்டால் விரும்புவான் கண்ணன்.

கௌரவமாய் நின்று பழகுவான் ராமன்;
கூடிக்  குலாவி மகிழ்வான் கண்ணன்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ராமனுக்கு;
தன் சொல்லே உயர்ந்த மந்திரம்  கண்ணனுக்கு.

துயர் வரும் போது துடித்தான் ராமன்;
துயர் வரும் போது சிரித்தான்  கண்ணன்.

மனிதன் போலவே வாழ்ந்தான் ராமன்;
மாயங்கள் பலப் பல  செய்தான் கண்ணன்.

மற்றவர் கருத்தை மதித்தான் ராமன்;
மற்றவர்க்கு கீதை போதித்தான் கண்ணன்.

ராம ராஜ்ஜியம் எனப் புகழ்ந்து  பாடினாலும்,
கிருஷ்ண சாயுஜ்யம் என்றே புகல்கின்றார்!

ராமன் செய்ததை நாம் பார்த்துப் படிக்கணும்;
கண்ணன் சொன்னதை  நாம்  கேட்டுப் படிக்கணும்.

ராமனும், கண்ணனும் எத்தனை எத்தனை
மாறுபட்டாலும்,  அன்றி வேறுபட்டாலும்,

இருவருமே நம் பாரதத்தின் தூண்கள்!
இருவருமே நம் அனைவரின்  கண்கள்!

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி

RAMA and KrishnA.

RAMA and KrishNA are both avatArs of Vishnu.
Yet they cannot be more different from each other!

RAMA was born in a palace.
KrishnA was born in a prison.

RAMA was a royal Prince.
KrishnA was a cowherd.

RAMA lived a luxurious life as a child.
KrishnA was always hiding from his enemies.

RAMA was a man of few words.
KrishnA loved to talk a lot!

RAMA spoke only satyam.
Whatever krishnA spoke became satyam.

People blessed RAMA all along.
Enemies tried to kill KrishnA all along.

RAMA never left behind a friend.
KrishnA was always on the move.

RAMA did not mingle with women.
KrishnA loved the company of women.

RAMA kept his distance from others.
KrishnA mingled freely with everyone.

His father’s words were ‘mantra’ for RAMA.
His words became ‘mantra’ for Krishna.

RAMA broke down in difficult situations.
KrishnA laughed at the face of problems.

RAMA lived as a human being.
KrishnA was a mAyAvi from the beginning.

RAMA listened to the others.
KrishnA taught the others.

RAMA RAjyam was famous.
Krishna SAyujyam is famous.

We have to learn from RAMA by doing what He did.
We have to learn from KrishnA by listening to what He said.

RAMA and KrishnA may appear totally opposed!
But they both form the pillars of India and Hinduism.

Advertisements

5 Responses to ராமனும், கண்ணனும்

 1. Periyasamy says:

  supper. message friend

 2. sridharan says:

  ஸ்ரீ ராமனையும் கண்ணனையும் ஒப்பிட்டு சொல்லிய வர்ணனைகள் மிகவும் நன்று. ஆனால் கிருஷ்ணனும் நம்பியவர்களை கைவிடுவதில்லை.

  நண்பர்களை என்றும் கை விடான் ராமன்;
  நகர்ந்து சென்று கொண்டே இருப்பான் கண்ணன்.

  அகமெலாம் ஆனந்தமாய் குசேலனை வரவேற்று உச்சி
  முகர்ந்து அணைத்து அவன் கொணர்ந்த அவலை ஏற்று
  சகல உபசரணைகள் செய்து ருக்மணி தேவியே கவலைகொள்ளுமாறு
  ஜகத்தில் செல்வங்கள் பலவும் தந்தது மாயக்கண்ணன் அன்றோ

  • கண்ணன் எப்போதும் முன் நோக்கிச் செல்பவன்.
   நண்பர்களைக் கைவிடுவான் என்பதில்லை.
   திரும்பிப் பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லையோ?
   குசேலன் தான் கண்ணனைத் தேடிச் சென்றான்.
   கண்ணன் குசேலனைத் தேடிச் செல்லவில்லை!

  • கண்ணன் எப்போதும் முன் நோக்கிச் செல்பவன்.
   நண்பர்களைக் கைவிடுவான் என்பதில்லை.
   திரும்பிப் பார்க்கச் சந்தர்ப்பம் வரவில்லையோ?
   குசேலன் தான் கண்ணனைத் தேடிச் சென்றான்.
   கண்ணன் குசேலனைத் தேடிச் செல்லவில்லை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s