ருசியும், வாசனையும்


ருசியும், வாசனையும் உணவுக்கு மட்டுமல்ல;
ருசியும், வாசனையும் பிறவிக்கும் தேவை.

மணக்க மணக்க உண்டபின், ருசி நாவிலும்,
மணம் கையிலும், நெடு நேரம்  தங்கிவிடும்.

அனுபவித்த பொருட்களின் பலவிதத் தாக்கம்,
மனதினில் மாறாமல் நிலை கொண்டிருக்கும்.

நமக்கு பிடித்த பொருட்களில், நமக்கு ருசி;
நமக்கு அவை வேண்டுமென்ற அவா, வாசனை.

நாம் எடுக்கும் பிறவிகள்  அனைத்துமே,
நம் ருசி, வாசனைகளைப் பொறுத்தவையே !

இசையில் ஆர்வம்,  நடனத்தில் நாட்டம் ,
இயலில் ஆர்வம்,  நாடகத்தில் நாட்டம் ,

கலைகளில் நாட்டம் , கற்பதில் ஆர்வம்,
சிலை வடிப்பதில் சிந்தனை என நம்மால்,

காரணம்  கூற முடியாத ஆசைகளை, நம்
கண்மணிகளிடம் நாம்  காண்கின்றோமே!

எங்கிருந்து வந்தன இந்த ஆர்வங்கள்?
எப்படி உண்டாயின இந்த நாட்டங்கள்?

பூர்வ ஜன்மத்து  ருசியும், வாசனையும்,
ஆர்வமாய் அவரைப் பின்தொடருவதாலே!

நல்ல ருசிகளையும், நல்ல வாசனைகளையும்,
நாமும்  நித்தம் மேற்கொள்ள வேண்டும்.

இப்பிறவியில் மட்டுமின்றி  அவை எல்லாம் ,
எப்பிறவியிலும் நமக்கு பயக்கும் நன்மையே.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

RUCHI AND VAASANAA.

Tastes and smells are essential in our food items. Only then we can relish and enjoy what we eat. The taste and the smell of the food we eat linger on in our hands, mouth and mind for a long time, after we finish eating!

The mental recordings of all our experiences linger on in our minds forming our Ruchi (our likes ) and Vaasanaa ( our aptitudes). Our future births are decided by our Ruchi and Vaasanaa we have now.

We find that our children have an aptitude for music or for dancing or for writing or for acting. Some of these aptitudes are inexplicable – since there is no family history or connection to these arts!

The how and from where do they develop such tastes and likes?

It is because the mental recordings of their previous births follow them to their present births. We must develop good tastes and good aptitudes. They are useful not only in this birth but also in all our future births.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s