உலக மகா அதிசயம்


ஒரு நாள் கேட்டேன் குருநாதரிடம்,
“உருளும் உலகின் அதிசயம் என்ன?”

“ஒரு கிளியைக் கூண்டில் அடைத்து,
ஒரு கதவைத் திறந்தால் என்ன ஆகும்?”

“உடனேயே பறந்து போய்விடும் கிளி,
உயர உயர, மீண்டும் பிடிபடாதபடி!”

“உலக மகா அதிசயம் இதுவே அறிவாய்;
உலகம் அனைத்துமே வியக்கும் அற்புதம்;

கூண்டில் சிறை உள்ளது உயிர்ப் பறவை;
கூண்டில் உள்ளன ஒன்பது வாசல்கள்;

மூடாத அவ்வாசல்கள் வழியே கிளி
ஓடாது இருப்பது ஏன் என்பதே அது”

அறிவீரா யாரேனும் இது என்ன மாயம்?
அறிந்தால் கூறும், அனைவருக்கும் லாபம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE GREATEST MYSTERY.

One day I asked my Sat guru, “What is the great mystery in the Universe?”

He asked me,”What will happen if you open the door of a cage in which a parrot has been kept a captive?”

I told him, “It will fly up and away – never to be caught by any man again!”

My guru replied, “Know this to be the greatest mystery in the Universe.
A jivan is arrested in the cage called a body. The cage has not just one but nine doors which are never locked up. Why then does the bird not escape from the cage and fly up and away?”

“Do any of you know the answer for this mystery?

If you do, please reveal it for the benefit of the entire humanity!”

Advertisements

8 Responses to உலக மகா அதிசயம்

 1. T.S.Afsha karima says:

  Hi in 2006 my family bought one parrot.It name was imli.This is so sweat.We didnot cut it flight muscles.Inspitre of it didnot fly because it donot no how to fly.Our whole family love imli.Before 2 years in 2009 mar 29 it died.above the information tells inside the parrot house it didnot fly but my imli had no seperate house,our house and imli house all is same.What you tell?

  • dear Afsha Karima!
   Imli must have loved you and your family members more than its freedom.
   That is why it did not try to escape from you and your home.
   Sometimes people or animals we have loved will be born again as pet animals in the same house.
   There many things we can’t explain through science.
   Only faith can explain and convince us.
   Did you get a new parrot to replace Imli?
   Do you really understand our beliefs and philosophy?
   If you do, I am very happy to have you as one of my readers!
   Most of them are interesting stories.
   Even if you don’t know to read Tamil, you can read the story in English given below.
   with Best wishes,
   Visalakshi Ramani.

 2. Sridharan says:

  மூடாத அவ்வாசல்கள் வழியே கிளி
  ஓடாது இருப்பது ஏன் என்பதே அது”

  ஒன்பது வாசல் ஒரு மந்திரத்தால்
  ஐம்புலக்கதவை அடைப்பதும் காட்டும்

  அவனை அறிந்தால் இந்த கேள்விக்கு விடை தருவான் விடையும் அவனேயாவான்.

  அதிசயம் பல…அதில் இதுவும் ஒன்று …

  நூல்…..மகா பாரதம்….யக்ஷ பர்வம்

  யக்ஷன் தருமனை பார்த்து கேட்டான்

  உலகிலே மாபெரும் அதிசயம் எது?

  தர்மன் சொன்னது

  கண்முன்னே பலர் மாண்டு வீழினும் தான் மட்டும் நிலையாக இருப்போம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைப்பது.

  • ஒரு மந்திரம் ஐம்புலன்களையும் ஒன்பது வாசல்களையும் மூடும்
   ஐம் பொறிகள் தறி கேட்டு அலையாமல் இருப்பதற்காக மட்டும்!
   ஆனால் உயிர் பறவை பறந்து செல்லாததற்கும் அதுவா காரணம்?
   கர்மங்கள் தீரும்வரை பிரியாது உயிர் என்பதல்லவா உண்மைக் காரணம்!

 3. Sridharan says:

  ஆனால் உயிர் பறவை பறந்து செல்லாததற்கும் அதுவா காரணம்?
  கர்மங்கள் தீரும்வரை பிரியாது உயிர் என்பதல்லவா உண்மைக் காரணம்!

  ஞாலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து முதுமை வந்த போழ்தில்
  ஆலம் விழுதுகள் போல் பெருகிய சுற்றமெல்லாம் ஓவென்று
  ஓலம் விட்டழுதாலும் நிற்காது அவ்வுயிர் கர்மங்கள் தீர்ந்தாலும்
  காலம் வரும் வரை மட்டும் நிற்குமே காலனுக்கு காலன் அருளாலே

  பாவம் பல செய்து பாழ்நரக குழியில் பலர் வீழினும்
  ஜீவன் முக்தர்களை கர்ம வினை தளைக்க மாட்டா
  ஆவதென்ன இவ்வுலகில் எனக்கினி? என்றிருப்பார்
  மாவலி சிரத்தில் கால்வைத்த தேவன் கட்டிய வழியில் நிற்பார்

  சட்டை கிழிந்துவிட்டால் அதை மானுடர் எங்கனம் தூர
  விட்டொழித்து வேறொன்று பெறுவாரோ அப்படியே உடல்
  கட்டழித்து ஜீவன் புறப்படுமே என்று அன்று அர்ச்சுனர்க்கு
  வட்டத்திகிரியில் பகல் காட்டிய மாயவனும் சொன்னானே

  “வாசாம்சி ஜீர்நாணி யதா விஹாய நவானி க்ருஹ்நாணி நரோபராணி
  ததா சரீராணி விஹாய ஜீனான்யன்யாணி சம்யாதி நாவாணி தேஹி”

  கீதை…..2….22

  கர்ம வினைகள் தீர்ப்பதற்காக மனிதன் பிறக்கிறான். ஆனால் இறைவன் விதிப்படியே அவன் மரணம் நிகழும். அதாவது கர்ம வினைகள் தீர்ந்தாலும் ஒருவன் இவ்வுலகில் வாழவேண்டும் என்று இறைவன் விதியானால் அம்மனிதன் ஜீவன் முக்தனாக வாழ்வான் என்பதே என் கருத்து.

  • ‘நான்’, ‘எனது’ என்ற இரண்டையும் துறந்தால்
   எல்லோருமே ஜீவன் முக்தர்கள் தான்!
   துறப்பது எப்படி என்று தான் புரியவில்லை! 😦

 4. Sridharan says:

  கூட்டை விட்டு கிளி பறக்க கர்மவினை தீர்ந்தது காரணமல்ல
  ஓட்டை விழுந்த பழைய துணி நீக்குவது போல் உயிர் போகும்
  ஏட்டை எடுத்து பார்த்து கீதையில் கண்ணன் அர்ச்சுனர்க்கு சொன்ன
  பாட்டை வைத்து பதில் சொன்னேன் உண்மை நிலை ஈசனே அறிவார்

  • ஓட்டை விழாத சட்டைகளும் கழன்று விழுகின்றனவே !
   கடந்த வாரம் எனக்குத் தெரிந்த இளம் தம்பதிகள்
   ஒரு சாலை விபத்தில் பலியானார்கள் . அது ஏன் ???
   படுத்த படுக்கையாக இருக்கிறார் என் மாமி
   கண்களை அசைக்கலாம், வாய் பேசலாம், உண்ணலாம்.
   நான்கு ஆண்டுகளாக வேறு எதுவும் செய்ய முடியாது!!!
   இது கர்மத்தைக் கழிப்பதற்காகவா?
   இல்லை என்றால் வேறு எதற்காக??
   எனக்குத் தெரியவில்லை! உங்களுக்கு?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s