1. “உன் அண்ணன்.”


உருவமும், அருவமும் ஆக விளங்கும்
கருநிறக் கண்ணன், கார்மேக வண்ணன்;
வருவான் அவனை விரும்பி அழைத்தால்,
சிறுவன் ஜடிலனின் கதை இதை உணர்த்துமே!

பண்டைய நாட்களில் பள்ளிகள் குறைவு;
எண்ணிவிடலாம் ஒரு கை விரல்களால்!
படிப்பதென்றால் பல காத தூரம் தனியே
நடந்து சென்றிட வேண்டும் மாணவர்கள்.

காட்டு வழியே தன்னந் தனியே தினம்,
காட்டு விலங்குகளின் பீதியில் செல்லும்,
சிறுவன் ஜடிலன் தன் ஏழைத் தாயிடம்,
மறுகியவாறே ஒருநாள் உரைத்தான்,

“கள்ளிக் காட்டைக் கண்டாலே அச்சம்.
பள்ளி செல்லவோ மிகவும் விருப்பம்.
எனக்குத் துணையாக யார் வருவார்கள்?
எனக்கு ஒரு பதில் கூறுங்கள் அம்மா!”

“கண்ணன் இருக்கும் போது நமக்கு
என்ன பயம் சொல், என் கண்ணே” என்ற
தாயிடம் கேட்டான் “யார் அந்தக் கண்ணன்?”
தாய் சொன்னாள், “அவன் உன் அண்ணன்.”

பாதி வழியில் சிம்ம கர்ச்சனை கேட்டு,
பீதியில் உறைந்த சிறுவன் ஜடிலன்,
“கண்ணா! கண்ணா! உடனே வா! என்
அண்ணா! அண்ணா!” என்று ஓலமிட,

மனத்தை மயக்கும் மோகனச் சிரிப்புடன்,
முன்னே வந்து நின்ற அழகிய சிறுவன்,
“வா தம்பி! நாம் பள்ளிக்கு போவோம்” என
வழி காட்டி நடந்தான் ஜடிலன் முன்னே.

பள்ளியை அடைந்ததும் ஜடிலனிடம்,
“பள்ளி விட்டதும் கூப்பிடு, வருவேன்” எனப்
பகர்ந்து மறைந்தவன் யார் என்பதை அந்தப்
பாலகன் அறியான், நாம் அறிவோமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

KRISHNA IS YOUR ELDER BROTHER.

Krishna can assume a shape (uruvam) and he can also be without a form

(aruvam) as He wishes to do. He will appear in person – if we call out

with faith and trust.

Jadilan was a young boy who had to go his school through a forest –

since there were very few schools in ancient time.

He would get frightened by the various growls and sounds of animals on

his way. He wanted some one to take him to school safely.

His mother told him to call out for Krishna. The boy demanded to know

who that Krishna was. The mother said that he is Jadilan’s elder brother.

The next day the boy got frightened by the growl of a lion and called out

for Krishna, his elder bother.

A beautiful boy with a divine smile appeared before Jadilan and escorted

him to the school. He promised to come back in the evening to take

Jadilan back home.

Jadilan did not know who the new boy was, but we all know who He was!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s