26. மாயையின் சக்தி.


“மாயையின் வயப்பட்டவர்களால்
மாயையை அறியவே முடியாது!”
கூறும் இறைவனிடம் நாரத முனிவர்
கூறினார்,”நானும் காணவேண்டுமே!”

நீண்ட நெடிய பயணம் சென்றனர்,
நீல வர்ணனும் நாரதரும் ஒருநாள்.
“நீர் வேட்கை மிகுந்து உள்ளது!
நீர் கொண்டு வாரும் நாரதரே!”

நீர் நிலையை அடைந்த நாரதர்;
நிகரற்ற ஓரழகியைக் கண்டார்.
அவளும் இன்சொல் பயிலவே,
அவரும் மதி மயங்கலானார் .

இருவரும் கூடி இன்புற்றிடவே,
பிறந்தன பலப் பல குழந்தைகள்.
கொடிய நோய் ஒன்று தோன்றியது;
நொடியில் மரணம் விளைவித்தது!

“வேறிடம் போவோம்” எனக் கூறி
வேகமாகக் குடும்பத்துடன் செல்ல,
பொங்கிய ஆற்று நீர் அனைவரையும்
எங்கோ இழுத்துச் சென்று விடவே,

தனித்து விடப்பட்ட நாரதர் கண்கள்
பனித்து அழுது புலம்பும் பொழுது,
“நீர் என்ன செய்து கொண்டுள்ளீர்?
நீர் கொண்டுவர இவ்வளவு நேரமா?”

“ஒரே நிமிடத்தில் இத்தனையும்
ஒருசேர நிகழ்ந்தனவா, இறைவா?
உன் மாயைக்கு ஒரு நமஸ்காரம்!
உனக்கு ஒரு கோடி நமஸ்காரம்!

மாயையை என்னிடம் நெருங்கிவிட,
மறந்தும் கூட நீ அனுமதியாதே!
மானிடர்கள் படும் துன்பங்கள்,
மாதவா! மலைப்பூட்டுதே!” என்றார்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE POWER OF MAYA.

Lord NArAyanA said to nAradA,” No one can recognize MAyA, while he was under its influence.” nAradA wanted to witness the power of mAyA.

They both went on a long journey. Lord NArAyanA became very thirsty and requested nAradA to fetch some water to drink.

nAradA went to a pond to fetch some water. He met an enchantingly beautiful girl there and fell in love with her. They got married and begot many children.

A strange disease started spreading in their country, killing everyone affected by it. nAradA and family tried to escape the disease by going off to a different city.

On the way a flash flood dragged away everyone except nAradA. He sat weeping bitter tears. At that point Lord Narayana asked him,”Why do you take such a long time to fetch water?

Only then nAradA realized that the entire drama has taken place in less than a minute! Such is the power of mAyA!

nAradA exclaimed to the Lord, ” The power of mAyA is really frightening! Poor humans live in mAyA all their lives. OH Lord! never ever subject me to your mAyA, I beg of you” .

Advertisements

2 Responses to 26. மாயையின் சக்தி.

 1. Sridharan says:

  தேவியே கண்ணனின் மாயா சக்தி பேரின்ப வாசல் சேர்க்கும்
  சாவியே அவளின் திருமந்திரம் அன்றொருநாள் ஈசனை தூதாக
  ஏவியே சும்பனை அழித்த மாதவி அவளின் திறத்தை வினைப்பட்ட
  பாவியர் அறியார் அவர் மாயை வசப்பட்டோரே

  இந்த கதையை நான் தேவி பாகவதத்தில் படித்திருக்கிறேன். மாயையின் செயல்களை பற்றி இக பர சுகம் எல்லாம் ஒரு சேர தரும் சப்த சதி நூலும் விளக்குகிறது. அருமையான கருத்துக்கள்.

  • தேவி பாகவதத்தைப் போன வாரம் தான் பூர்த்தி செய்தேன்.
   கண்டிப்பாக உங்கள் விமரிசனம் எனக்குத் தேவை என்பேன்.

   எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்காதது
   மற்றவர்களுக்காக எழுதும் போது நன்கு புரிகின்றது.
   மனதில் பதிகின்றது. நினைவில் நிற்கின்றது.

   The best way to learn is to teach someone. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s