31. பரப்பிரம்மம்.


தேவர்கள், அசுரர்களிடையே
தீவிர யுத்தம் ஒன்று நடந்தது.
மிகுந்த போராட்டத்தின் பின்னே,
மிதந்தனர் வெற்றியில் தேவர்கள்.

சிறப்பாகத் தாம் போர் புரிந்ததாக
சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள்,
கண்டார்கள் ஒரு புதிய தேவனை;
கண்டிராதவன் இதுவரை எவருமே!

“அது யார் எனக் கண்டு வாருங்கள்”,
அனுப்பப்பட்டான் அங்கு அக்னி தேவன்.
“நீர் யார்?” என்றான் புதிய தேவன்,
“நீர் அறியீரோ நான் அக்னி என்பதை?”

“உமது திறமை என்ன கூறுங்கள்?”
“உலகிலுள்ள எதையும் எரிப்பேன்!”
“இதை எரியுங்கள்” எனக் கூறியவன்,
இடையில் வைத்தான் ஒரு சிறு புல்லை.

எத்தனை முயற்சிகள் செய்தாலும்,
எரிய மறுத்துவிட்டது அச் சிறு புல்!
ஊதி, ஊதி முயன்ற அக்னி தேவனின்
உடலே களைத்துப் போய்விட்டது!

அடுத்து அங்கே அனுப்பப்பட்டவன்
மிடுக்குடன் சுற்றித் திரியும் வாயு!
“உம்முடைய திறன் என்ன கூறும்?”
“நான் எதையும் பறக்கவிடுவேன்!”

“இதைப் பறக்கவிடும் ” என்றவன்
இடையில் வைத்தான் ஒரு சிறு புல்.
மூச்சு முட்ட ஊதின போதிலும்,
முன்னிருந்த புல் எழும்பவே இல்லை.

குனிந்த தலையுடன் திரும்பியவன்,
கூறினான் இந்திரனைச் செல்லுமாறு!
இந்திரன் நெருங்கியதும் மாயமாய்
முன்னிருந்த தேவன் மறைந்துவிட,

சுந்தரியாக நின்றாள் அங்கே,
சங்கரனின் சகி, அன்னை உமை.
“அந்தத் தேவன் யார் என்ற ஞானம்
தந்தருளும் தாயே” என வேண்டிட,

“அவரே பரபிரம்மம் ஆவார்!
அவர் உதவியால் வெற்றி உமக்கு!
இருந்த போதிலும் நீங்களெல்லாம்
மறந்து போய் விட்டீர்கள் அவரை”.

உலக வழக்கம் இதுவே அறிவோம்,
அன்னை தந்தையைக் காட்டுவாள்.
உம்பர் உலகிலும் அதுவே நிகழ்ந்தது!
அன்னை பிரம்மத்தைக் காட்டினாள்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

PARABRAHMAM.

dEvAs and asurAs battled for a very long time. Finally dEvAs won the battle and were celebrating their victory.They saw a new God whom they had never met before. Agni was sent to find out who He was.

The new God asked Agni,”What is you special power?” Agni said that He can burn anything. The new God placed a straw and told Agni to burn it. However hard Agni tried, he was unable to set it afire.

Next vAyU was sent to find out about the new God. He was asked by the new God,”What is your special power?”

vAyU said that He can blow away anything. The new God placed a straw and told vAyU to blow it away. However hard He tried VAyU was unable to blow it away.

Now Indran was sent but the new God had already disappeared and Uma dEvi stood there in His place. She told the dEvAs that the new God was Para Brahmam and that He was the real cause of their victory over the asurAs. Without Him none of them really had any power to do anything at all!

In our world, it is always the mother who introduces the father to a child. Even in Heaven, the Mother of the universe Uma dEvi had to introduce the Para Brahmam to His children-the devAs!

Advertisements

2 Responses to 31. பரப்பிரம்மம்.

  1. கவிதை அருமையாக இருந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s