32. இறைவழிபாடு.


“இறை வழிபாட்டால் நன்மைகள்
இருக்கின்றனவா இல்லையா?”

தொன்று தொட்டு கேட்கப்படும்,
இன்று நேற்று அல்ல, இக்கேள்வி!

நண்பர்கள் இருவர் நடந்தனர்
நண்பகலில் ஒரு தனிவழியில்.

தென்பட்டது இறைவனின் ஆலயம்,
என்றோ எவராலோ கட்டப்பட்டது.

“வணங்கி வழிபடுவோம் வா” என
வருந்தி அழைத்த நண்பனிடம்,

“நான் வரவில்லை கோவிலுக்கு!
நான் இங்கே நிற்பேன் நீ செல்!”

என்றவன் நின்றான் வெளியே
நன்று எனச்சென்றான் மற்றவன்.

இறைவனை வழிபட்டவனை
கருந்தேள் கடித்து விட்டது!

வெளியே நின்றவனுக்கு ஒரு
வெள்ளிப் பணம் கிடைத்தது!

நினைக்க நினைக்க தாளவில்லை,
நிற்காமல் குருவிடம் சென்றான்.

“வணங்கிய எனக்கு தேள்கடியாம்,
வணங்காமுடிக்கு வெள்ளிப்பணம்!

குருவே இது என்ன நியாயம்?
இறைவனின் செயல்களிலே?”

கண்டார் ஞானதிருஷ்டியில் குரு,
கண்களால் காணமுடியாதவற்றை.

“மகனே! உனக்கு இன்று
மரணம் நிகழ இருந்தது.

இறை வழிபாட்டினாலேயே,
பாம்புக்கடி தேள்கடியாயிற்று!

உன் உயிரும் பிழைத்தது
உன் தெய்வ பக்தியினாலே!

வெளியே நின்ற நண்பனுக்கு
வெகு யோகமான நாள் இன்று!

புதையல் கிடைக்கும் யோகம்,
பூரணமாகப் பொருந்தியிருந்தாலும்,

இறைவழிபாடு இல்லாததால்,
சிறு வெள்ளிப் பணமே பரிசு!

ஆண்டவன் செயல்களை நாம்
ஆராய்ந்து அறிய முடியுமா?

நம்பிக்கையை இழக்காதே நீ!
தும்பிக்கையான் கைவிடான்”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE POWER OF PRAYER.

Whether or not worshiping God has beneficial effects, is the question that has been asked for thousands of years.

Two friends were passing by a temple. One of them wanted to worship the deity and the other wanted to stay out and wait for him.

The friend who went into the temple got bitten by a venomous scorpion. The friend who had waited outside found a new shining silver coin!

The first man went to his guru and asked angrily,”Why I who worshiped the God got bitten by a scorpion and my friend who did not worship God a gift of a silver coin?”

Guru used his gnAna dhrushti and told him these startling truths.The first man was destined to be bitten by a cobra on that day! God with His infinite mercy had changed it to a mere scorpion bite. His friend was destined to find a buried treasure. Since he did not worship God, he got merely a single silver coin.”

Who are we to understand or comment on the actions of God? As long as we never lose our faith and trust in Him, nothing bad will happen to us or trouble us!

Advertisements

2 Responses to 32. இறைவழிபாடு.

 1. saramadikal says:

  இறைவழிபாடு முறைகள்
  http://saramadikal.blogspot.in/2013/06/blog-post_9196.html
  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  சாரம் அடிகள்
  94430 87944

  • அன்புள்ள ஐயா!
   உங்கள் blogspot கண்டேன். மிகவும் நன்றி! உபயோகமான பல விஷயங்களை அதில் தந்துள்ளீர்கள்.
   “உருவமும் அருவமும் ஏன்?” என்பது பற்றி நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன்.
   “முடியாததில்லை” கவிதை இறைவன் எதையும் செய்ய வல்லவன் என்கின்றது.
   அவைகளும் இந்த “எண்ணங்களின் வண்ணக் கலவை”யில் உள்ளன.
   சின்னச் சின்னக் கதைகளில் பெரிய பெரிய விஷயங்களைக்கூறுகின்றனர் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்றவர்கள்.
   அவற்றை அடிப்படியாக வைத்தே பல கவிதைகளை “அறிந்ததும் அறியாததும்” என்ற பகுதில் எழுதியுள்ளேன்.
   நன்றி கலந்த வணக்கம்!
   உங்கள் உண்மையுள்ள,
   விசாலாக்ஷி ரமணி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s