34. ஒரு சிறு புறா.


சந்திர வம்சத்து அரசர்களுக்குள்
சந்திரன் போல ஒளி வீசுபவன்,
சக்கரவர்த்தி சிபிராணா என்னும்
மக்களின் மன்னர் மன்னனே.

எளியோரைக் காப்பதே தன்
தொழிலாகக் கொண்டவனை,
சோதிக்க விரும்பினான் ஒரு
நீதிக்கு தலைவனான தேவன்.

தனியே உப்பரிகையில் நின்ற,
மனிதருள் ஒரு மாணிக்கமான
மன்னனை நோக்கிப் பறந்தது,
சின்ன வெண்புறா ஒன்று.

பறக்கும் புறாவின் பின்னால்
துரத்தும் பெரிய கழுகுஅரசனும்
மன்னனை நோக்கி வந்து, அவன்
முன்னேயே அமர்ந்து கொண்டது.

“காப்பாற்றுங்கள்!” எனக் கூறும்
அப்பாவிப் புறா ஒரு பக்கம்,
“என் உணவைப் பறிக்காதீர்!”
மன்றாடும் கழுகு மறு பக்கம்.

உண்ணப்பட்டால் புறா மாளும்;
உண்ணாவிட்டால் கழுகு மாளும்,
இரண்டு உயிர்களும் சமமாகும்
இறைவன் அருட் பார்வையிலே.

அரசனின் தவிப்புக்கு, கழுகு
அரசனே வழியும் கூறியது.
“கண்ணீர் சிந்தாமல், நீயுன்
திண்ணிய உடலில் இருந்து

எடைக்கு எடை தருவதற்கு
தடை ஏதும் இல்லை மன்னா!”
வந்தன தராசும் ஒரு கத்தியும்;
தந்தான் தன் தொடைத் தசையை.

தட்டுகள் சரி சமமாகவில்லை,
வெட்டி வெட்டி இட்டபோதும்;
புறாவின் தட்டு கீழே இருக்க,
மாறாது நின்றது மறு தட்டு.

மயங்கிய மன்னன் இறுதியில்
தயங்காமல் ஏறி அமர்ந்தான்;
உடனே, தட்டுகள் இரண்டும்
மடமடவென்று சமமாயின.

பூமாரி பொழிந்தது அங்கு!
பூவுலகத்தோர் அதிசயிக்க,
புறாவும், கழுகும் மறைந்து
புகைபோல எங்கோ போயின.

நின்றனர் சிரித்தபடி அங்கே
இந்திரனும், யமதர்மராஜனும்.
தங்கம் போல நல்ல உடலையும்
மங்காத வாழ்வையும் பெற்று,

இன்று வரை சரித்திரத்தில்
மன்னுபுகழ் அடைந்தான் சிபி;
அன்புடையார் உரியர் தம்
என்பும் பிறர்க்கு, அன்றோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

SIBI RANA AND THE PIGEON.

A pigeon was chased by an eagle and sought King Sibi’s protection. The eagle was willing to release the pigeon on one condition. The king must give equal weight of flesh from his own body-without shedding even a drop of tear.
A pair of scales and a sword were brought to the king. The king sliced off his thigh muscle and put it in the balance against the weight of the pigeon.The pigeon’s side was heavier.
He cut off more and more of his body and placed the pieces on the scale.
The pigeon was heavier than all the flesh the king could offer. Finally he sat on one side of the scale and his weight exactly balanced that of the pigeon!.
The dove and the eagle suddenly disappeared and in their places stood Indran and yaman. Flowers rained from the sky!
The dove was Indran and the eagle was Yaman. They had played this drama to show to the world what great humanitarian the King Sibi was.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s