35. அஷ்ட வக்கிரன்.


வேத விற்பன்னரான உத்தாலகரிடம்
வேதம் பயின்ற ஒரு சீடர் கஹோளர்;
நியம நிஷ்டைகளில் சிறந்த போதிலும்,
திறமை குறைந்தவர் வேதப் பயிற்சியில்.

சீலம், பக்தி, நற்குணம் பெற்றிருந்ததால்,
சீலவதி குருவின் மகளையே மணந்தார்.
வேத பாடத்தின்போது அருகே அமர்வாள்
மாதரில் சிறந்த குருவின் மகள் சுஜாதை.

கருவில் உருவான குழந்தையும் கூட,
கருவிலேயே வேதம் கேட்டுப் படித்தது;
தந்தையின் தவறுகளைக் கேட்டு வருந்தி,
விந்தையாய் எட்டுக் கோணல் அடைந்தது!

அஷ்ட வக்கிரன் என்று பெயர் பெற்றவன்,
கஷ்டமான வேத, வேதாந்தங்களைத் தன்
பாலப் பருவத்திலேயே நன்கு பயின்றதால்
பால சூரியனைப் போலவே திகழ்ந்தான்.

மிதிலையில் நிகழ்ந்த பெரிய யாகத்துக்கு
மிதப்புடன் சென்றவனைத் தடுத்தான்,
தோற்றத்தை மட்டும் கண்டு ஏமாந்த,
ஏற்றத்தை அறியாத அறிவிலி சேவகன்.

“வெளித் தோற்றம் அறிவுக்குப் பிரமாணமா?
வெளி வடிவம் பருத்து, உள்ளே பஞ்சு ஆனால்?
முதிர்ச்சி என்பது வெறும் வயதினால் அல்ல;
முதிர்ச்சி என்பது ஞானத்தாலேயே உண்டு.”

வாத நிபுணன் வந்தியைத் தன்னுடைய
வாதத்தால் வென்ற அஷ்டவக்கிரன், தன்
தந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்ற அந்த
வந்திக்கும் அதே கதியை ஏற்படுத்தினான்.

தோற்றத்தைக் கண்டு ஒரு மனிதனின்
ஏற்றத்தை நாம் எடை போட வேண்டாம்.
தோற்றங்கள் நம்மை ஏமாற்றிவிடலாம்;
ஏற்றங்களை நாம் உணருதல் வேண்டும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

ASHTA VAKRAN.

This is the story of the GnAni ashtavakran.His father was originally a disciple of his grand father who was a famous Guru. The guru married his lovely daughter SujAtA to his disciple – since he was a good man and excelled in the other duties assigned to him.

The father was not very proficient in the Vedas.Whenever he committed a mistake in Veda, the baby in the womb of his wife, would bend and get distorted. So when the boy was born he had eight distortions in his body and was named as Astavakran.

He became proficient in Vedas and sAsthrAs at a very early age. He shone like a Sun God with his gnAnam and accomplishments.

He visited Janaka MahArAjA’s court with his friend.The dwarapAlakan refused entry to this distorted man. Ashtavakran told him that gnAnam of a person did not depend on the age or the appearance of the person.

He won over a proud pundit called Vandhi, in a war of debate. Vandhi had won over many other pundits earlier and caused them to be drowned in a river – when they failed in their debates.

Astavakra gave the same punishment to Vandhi and avenged his father’s untimely death caused by Vandhi. .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s