36. கர்வ பங்கம்.


கர்வம் மேலோங்கினால், அதை
சர்வ வியாபி கண்ணன் அழிப்பான்.
பதிவிரதை நானே என்ற கர்வத்தைச்
சதி திரௌபதி விடுத்த கதையே இது .

அஞ்ஞாத வாசத்துக்கு முன்னர்,
மெய்ஞானி ஆன மாயக் கண்ணன்
சொன்னான் அப்பாண்டவர்களிடம்,
“இன்னொரு இடம் போவோம் நாம்.”

காமிய ஏரிக்கு அருகே ஒரு
ரம்மியமான இடத்தில் வந்து
தங்கினார்கள் மூன்று நாட்கள்,
பொங்கும் புதிய உணர்வுடனே.

அழகியதொரு ஆஸ்ரமம்; அதன்
அழகிய பூந்தோட்டத்தில் ஒரு
பழுத்த மாங்கனியைக் கண்டனர்,
பழக்காலமாக இல்லாதபோதிலும்.

விரும்பிய திரௌபதிக்கு, கனியை
விரும்பித் தந்தான் அர்ஜுனன்.
“என்ன காரியம் செய்தீர் நீர்?”
என்றே பதைத்தான் கண்ணன்.

“கடும் தவ முனிவர் ஒருவர்
பெறும் உணவு தினம் இக்கனியே.
சபிப்பாரோ அன்றி எரிப்பாரோ?
அபிப்பிராயம் அவருக்கு எதுவோ?

மனத்தில் உள்ள எண்ணங்களை,
மறைக்காமல் வெளியே கூறினால்,
மாங்கனி எழும்பி முன் போலவே
மரத்திலேயே இணைந்து விடும்.”

“அரசனாகி நான் மீண்டும் நிறைய
அறச் செயல்கள் புரிய வேண்டும்”
தருமன் இதைச் சொன்னதும் கனி
தலை அளவுக்கு உயர்ந்து நின்றது.

“மார்பைப் பிளந்து சத்தியமாக
மாள வைத்து, துரியோதனனின்
தொடையைக் கதையால் பிளந்து
முடிப்பேன் சபதத்தை, பீமன் நான்!”

“கர்ணனைக் கொல்வதே என்
வர்ணிக்க முடியாத ஆக்ரஹம்.”
அர்ஜுனன் சொன்னபோது, கனி
மரக் கிளையின் வெகு அருகில்.

“பட்டத்து இளவரசன் ஆவேன் நான்,
இஷ்டத்துடன் அன்னையைக் காப்பேன்.”
“அண்ணனுக்கு சாமரம் வீசிக்கொண்டு,
அண்மையிலேயே இருப்பேன் நான்.”

அழகிய இரட்டையரின் சொற்கள்;
கனியோ கிளையின் காம்பருகே!
“அழ வைத்தவர்களின் அழிவினைக்
கண்டு நான் சிரிப்பேன்!” திரௌபதி.

உயர்ந்திருந்த கனி, மீண்டும்
தயங்காமல் மண்ணில் விழுந்தது.
வேறு வழி இல்லாமல், அப்போது
கூறினாள் அவள் உண்மையினை.

“யாகத்தில் கர்ணனைக் கண்டு,
வீரனிவன் குந்தி மகனானால்,
யாருக்கும் வாய்க்காத வலிய
ஆறு வீரருக்கு மனைவி நான்!”

விக்கித்துப் போயினர் அவள்
வீரக் கணவன்மார்கள் ஐவரும்.
“இவளா சதி? இவளா பதிவிரதை?”
அவள் கர்வம் மறைந்து போனது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

GARVA BANGAM.

When pAndavAs were about to begin their ‘agnAtha vAsam’, dhroupathi had become very proud of her fame as a ‘pathivrathai’. krishnA wanted to deflate her pride and played this subtle drama.

They had moved to a new place and saw an Ashram and a beautiful garden. A single ripe mango was hanging from a tree-even though is was not the mango season!

Arjuna gave it to dhroupathi since she wanted to eat it.Krishna got agitated-as it was the only daily food of a great rishi, who owned the ashram.

He said that if everyone spoke the thought in their mind truthfully the mango would get stuck to the tree once again.

Dharman said that he wanted to perform many charities and good deeds after becoming the lawful king once again.
Bheeman said that he would make his vow come true by killing dhuryOdanan by busting open his thigh with his mace and ripping open his chest with his nails.

Arjunan said that his only wish was to kill karnan. nakulan said that he would become the crown prince and take good care of his mother. sahadEvan said that he would be with dharman – fanning with sAmaram.The mango had risen slowly and was very close to its stalk.

dhroupadi said that she would laugh at the destruction of all those who had caused her sorrow and shame.Since the five men had told the truth, the fruit rose very close to its stalk.. But dhroupadis statement made the fruit fall to the ground again! Then she was forced to reveal her inner most thought.

When she had seen Karna in the yAgasAlA, she had wished that, if he too were kunthi’s son she would have married six of the greatest men on earth – a privilege no woman had ever enjoyed on the earth! .

Her husbands stood shocked and rooted to the spot.Her pride as a pathivratha vanished into thin air in no time!.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s