38. பொறாமைத் தீ.


கச்யபரின் பல மனைவிகளில் இருவர்,
கத்ரு, வினதா என்னும் சகோதரிகள்.

கணவனின் அன்பைப் பெறவேண்டியே
கண நேரமும் வீணாக்காமல் முயலுவர்.

பலமுறை கத்ரு விரும்பி விழைந்தது,
பலமுள்ள புதல்வர்கள் ஓராயிரம் பேர்.

விரும்பியபடியே அவள் அடைந்தாள்,
வீரம், பலம் மிகுந்த ஆயிரம் நாகங்களை.

வினதா விரும்பியதோ இரு மகன்கள்;
வீரமும், வெற்றியும் கொண்டவர்கள்.

பிறந்தன அழகிய இரண்டு முட்டைகள்,
பிறகு மாறி விடும் இரண்டு மகன்களாக!

ஐநூறு ஆண்டுகள் தவம் கிடந்தாள், பல
ஐயங்களை மனதில் கொண்ட வினதா.

பொரியவில்லை அங்கே முட்டைகள்.
வெளியே வரவில்லை இரு மகன்களும் .

பொறுமை இழந்தவள், ஒரு முட்டையை
பொரியும் முன்பே உடைத்து விட்டாள்.

பாதி உடல் மட்டுமே உருவாகி இருந்த
பாலனைக் கண்டு, மனம் பதைத்தாள்.

ஆக்கப் பொறுத்தவள் ஆகிய அன்னை
ஆறப் பொறுக்கவில்லை, கொடுமையே!

பாதி உடலுடன் இருக்கும் அருணனை,
சாரதி ஆக்கிக் கொண்டான், சூரியன்.

அல்லும் பகலும் இரத்தில் ஏறிச்
செல்லுவதற்கு கால்கள் வேண்டாமே!

போயின மேலும் ஐநூறு ஆண்டுகள்;
தாயின் தவமும் பலித்தது அங்கே.

ஆயிரம் சூரியர்களின் ஒளியுடனே,
அருமை மகன் கருடன் தோன்றினான்.

சேய்கள் நாக, அருண, கருடர்கள்
தாய் வேறானாலும் சகோதரரே.

ஒரு தந்தை மகன்களான போதும்
ஒருவருக்கொருவர் ஜன்மப் பகை.

மகளிர் கொண்டது பொறாமைத் தீ;
மகன்கள் கொண்டதோ பகைமைத் தீ!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE FIRE CALLED JEALOUSY.

Kadru and Vinatha were two sisters married to the same rushi. They were jealous of each other and were always trying to win their husband’s love and affection.

Kadru wanted a thousand strong sons. So she got 1000 famous nAgAs as her sons.

Vinata wanted two very strong and distinguished sons. She gave birth to two eggs. Five hundred years had passed by but nothing emerged from the eggs.

Vinata lost her patience and broke open one of the eggs,. She was sorry to find the half formed body of her son. He had only the upper parts of his body developed!

He was named as Arunan. The sun God made Arunan his saarathi. Sun is always on the move and the saarathi never needed to get down from the chariot.

Another 500 years rolled by and Garudan emerged from the other egg. He was more brilliant than even the Sun God.

The mothers were two sisters and jealous of each other. Their sons were half brothers but became ‘janma virOdhis’.

Advertisements

2 Responses to 38. பொறாமைத் தீ.

  1. vl brinda says:

    This is similar to Mahabharata , in which Khandari tears her stomach, when Kundi gave birth to sons and as a result Khandari had 100 Pindas. These 100 pindas were zealous and cruel in nature, since Khandari was aggressive when she does not able to give birth to babies.
    ஆக்கப் பொறுத்தவள் ஆகிய அன்னை
    ஆறப் பொறுக்கவில்லை, கொடுமையே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s