45. ஜடபரதன்.


பரதன் என்ற பெயர் படைத்த
அரசன், மகான் ரிஷபரின் மகன்.
பாரத வர்ஷம் என்னும் அழகிய
காரணப் பெயர், இவராலேயே!

மனைவி, மக்கள் மோட்சத் தடை
எனவே நினைத்து, அவரை விடுத்து,
அனைத்தையும் துறந்து வாழ்ந்தார்,
அழகிய சக்ர நதியின் கரையினிலே.

ஒரு நாள் கண்டார், ஒரு பெண் மான்
அருகினில் ஆற்று நீர் பருகுவதை.
பூரண கர்ப்பிணியான அம் மானும்
நீர் வேட்கையைத் தீர்க்கும்போதே,

விழுந்தது செவிகளில், சிம்ம கர்ஜனை!
விழுந்தது நழுவி நீரில், அதன் கர்ப்பம்!
தாவிய பெண்மான் கரையிலேயே விழ,
ஆவி பிரிந்தது அவ்வழகிய மானின்.

நீரில் அடித்துச் செல்லப்படுகின்ற,
சீரிய கர்ப்பத்தைத் துரத்திச் சென்று,
வீரியத்துடன் மீட்ட பரதன், அதன்
காரியங்கள் அனைத்தையும் செய்ய,

தாயும் ஆகித் தந்தையுமாகிப் பேணி
தவ நியமங்களைத் துறந்துவிட்டான்.
மனம் முழுவதும் மான்குட்டி மீதே!
தினமும் விரும்பிய முக்தி மீதல்ல.

இறுதி நினைவுகள் மான் மீதே இருக்க,
பிறவி எடுத்தார், ஒரு மானாகவே!
பக்தியும், ஞானமும் மறையவில்லை,
முக்தியின் ஆசையும் குறையவில்லை.

தனியாகவே அம் மான் வாழ்ந்து வந்தது,
தவச் சீலரின் ஒருவர் ஆசிரமத்தருகே!
இலை, தழை, புல்லைத் தின்ற மான்
இயற்கை எய்தியது, நீர் நிலையிலேயே!

தவச் சீலரான அந்தணர் ஒருவருக்குத்
தவறாமல் சென்று பிறந்தான் பரதன்.
பாச வலைக்கு அஞ்சி வெருண்டதால்,
மோசம் போகாமல் காத்துக்கொண்டான்.

குருடன் போலவும், ஒரு பித்தனாகவும்,
செவிடன் போலவும், உன்மத்தனாகவும்,
கிடைத்ததை உண்டு, நிலத்தில் உறங்கி,
கிடைத்ததை அணிந்து, ஜடபரதன் ஆனான்.

இறுதி நினைவுகளே முடிவு செய்யும்,
மறுபிறவி நம்முடையது என்ன என்று!
இறை நினைவினில் திளைத்திருந்தால்,
இறையுடன் கலந்திடும் வாய்ப்பு உண்டு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

JADA BHARATAN.

Bharathan, the son of King Rishaban, was a famous king of ancient India. India is named as Bharatha kandam in honor of this king.He wished to obtain Mokhsham. He thought that his love for the members of his family would disturb his spiritual saadhana. He left his palace and stared living hermit’s life near the banks of river Chakra.

One day he watched a female deer drinking water in the river. It was bulging with its baby in the womb. Suddenly the roar of a lion was heard. The terrified deer jumped to the river bank but its fetus fell in the river and was being carried way by the stream. The female deer collapsed and died. Bharathan saved the little baby deer from the river and took care of it.

Slowly his mind and concentration were completely absorbed by the deer and his spiritual saadhanaas took a back seat.His mind was dwelling on the deer when he gave up his spirit and so he was reborn as a deer.

The deer remembered its bakthi and desire for mukthi.But it could not do any saadanaa as now it was merely a deer.

He lived by himself, eating dried leaves and grass, near the aashram of a rushi.

He died in the river and was reborn in the family of brahmins. He was afraid to move closely with anyone-fearing that he might get caught in the net of affection and waste one more janma.

He ate whatever he could get hold of and slept on the bare ground. He wore dirty clothes and behaved like a mentally challenged person and soon came to be called as Jada Bharathan.

The thoughts prevailing in one’s mind when his spirit leaves his body determines his next birth. It will be a safe bet to keep one’s mind always focused on God as this might give us a chance to merge with Him.

Advertisements

2 Responses to 45. ஜடபரதன்.

 1. sridharan says:

  இறுதி நினைவுகளே முடிவு செய்யும்,
  மறுபிறவி நம்முடையது என்ன என்று!
  இறை நினைவினில் திளைத்திருந்தால்,
  இறையுடன் கலந்திடும் வாய்ப்பு உண்டு!

  ஆம் கீதையில் கண்ணன் இதையே சொல்கிறார்.

  அந்திம நாளில் மனதில் எண்ண வடிவில் தோன்றும்
  சிந்தனை எதுவோ அதுவே உயிரை மீண்டும் இங்கு
  பந்தப்படுத்தி வரவழைக்கும் பேரின்ப வாயிலுக்கு
  சொந்தம் ஒருவனே இட்டுச்செல்வான் அவனே பரமாத்மா

  “யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்யந்தே கலேவரம்
  தம் தமேவைதி கௌந்தேய சதா தத்பாவபாவித:”

  கீதை 8…..6

  • இதே கருத்து தேவி பாகவதத்திலும் கூறப்படுகின்றது.
   தேவியின் மணித்வீபத்தை நினைத்துக் கொண்டே இறப்பவன்
   எளிதாக அதையே அடைந்து விடுகின்றான் என்கின்றார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s