46. மண் அணை.


பரத்வாஜரின் நண்பர் ரைப்யர்,
பாரதத்தின் சிறந்த வித்துவான்.
தந்தையர் நண்பர்கள் ஆனாலும்,
மைந்தர்கள் மிக மாறுபட்டவர்கள்.

ரைப்யரின் மகன்கள் இருவர்,
பராவசு மற்றும் அர்வாவசு.
தந்தை போன்றே இருவரும்
வேதவல்லுனர், வித்துவான்கள்.

பரத்வாஜரின் மகன் யவக்ரீவன்,
சிரமப் படாமலேயே கல்வி கற்க
ஒரு முயற்சி செய்தான், கொடிய
நெருப்பினில் தன் உடலை வாட்டியே!

இந்திரனை நோக்கிக் கடும் தவம்,
“எந்த முயற்சியும் இன்றியே அரிய
வேத வேதாந்தங்களின் அறிவினைத்
தோதாகத் தந்தருளுமாறு” வேண்டியே.

கங்கைக் கரையில் கண்டான் அவன்,
மங்கிய பார்வை உடைய கிழவனை;
அங்கையில் மணலை அள்ளி அள்ளியே,
கங்கையில் வீசும் வினோத மனிதனை.

“எண்ணம் என்ன சொல்லும் தாத்தா,
தண்ணீரில் மணலை அள்ளி வீசுவதில்!
தள்ளாத வயதில் இது என்ன ஒரு விதப்
பொல்லாத விளையாட்டு உமக்குக் கூறும்”

“பொங்கும் கங்கையை கடந்து செல்ல,
தங்கும் மணல் அணை கட்டுகின்றேன்.
எத்தனை பேர்கள் இந்த ஆற்றினை
யத்தனமின்றிக் கடக்க, அது உதவும்!”

“புத்தி பேதலித்துவிட்டதா, அல்லது
புத்தி மழுங்கியே போயிற்றா கிழவா!
கங்கை ஆற்றை ஒரு மண் அணையால்,
எங்கேனும் தடுக்க முடியுமா, சொல்லும்!”

“குருவிடம் சென்று சிரமப்படாமலேயே,
பெரும் வேதங்களைக் கற்க முடிந்தால்,
பொங்கும் கங்கையில் இம்மணல் அணை
தங்கும்; வேண்டாம் வீண் ஐயங்கள்!”

இப்போது புரிந்தது, யவக்ரீவனுக்கு
அப்போது வந்திருப்பது யார் என்று!
தவத்துக்கு அருள் செய்ய வேண்டித்
தன்னைத் தேடி வந்துள்ள இந்திரனே.

அடி பணிந்தான், ஆசி கோரினான்;
“குரு அருள் இன்றி கல்வி இல்லை!
ஒரு குருவினை நாடுவாய், நீயும்
பெரும் வித்துவானாகவே ஆவாய்”

சுவர் இல்லாமல் சித்திரமா?
குரல் இல்லாமல் இன்னிசையா?
கால் இல்லாமல் நாட்டியமா?
குரு இல்லாமல் ஒரு கல்வியா?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

A DAM OF SAND!

Bharadwaajar and Raibhyar were good friends.But their sons were very different from one another. Raibhyar’s two sons Paraavasu and Arvaavasu were well versed vidhvaans in Vedas.

Yavagreevan, the son of Bharadwaja was jealous of their accomplishment but wanted to get the knowledge of Vedas without studying under a guru.

He did a severe penance and roasted his body in the burning flames, hoping that Indra would take pity on Him and bless him with the knowledge of the Vedas.

One day he saw a very old man throwing handfuls of sand in the river Ganga. When questioned the old man said that he was building a dam across Ganga with the sand.

Yavagreevan asked whether it was humanly possible to do so.The old man replied that if it were possible for person to learn Vedas without the guidance of a Guru, this was also a possible feat.

The old man was none other than Indra in disguise. He blessed Yavagreevan and advised him to approach a Guru to learn Vedas.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s