47. இரு சகோதரர்கள்.


நாராயணன் அருள் பெற்ற பாண்டவர்கள்,
நாராயணாசிரம வனத்தில் இருந்தபோது,

வந்தது காற்றில் பறந்தபடியே, திவ்விய
கந்தம் கமழும், தெய்வீக மலர் ஒன்று!

மலரின் மணத்திலும், வடிவத்திலும்
மனத்தைப் பறிகொடுத்த பாஞ்சாலி,

மலரும், செடியும் வேண்டும் என்றே
மனம் கவர்ந்த பீமனை வேண்டினாள்.

மணத்தைத் தொடர்ந்து சென்ற பீமன்,
வனக் குரங்கு ஒன்றைக் கண்டான்,

நெருப்பென ஜொலித்து, சோலையில்
வரும் வழியை அடைத்துக் கொண்டு.

நீங்கி வழி விடவேண்டும், என பீமன்
ஓங்கிக் குரல் எழுப்பிய போதிலும்,

நீங்காமலேயே கிடந்த அவ்வானரம்
தூங்குவது போன்றே தோன்றியது.

மீண்டும் குரல் எழுப்பிய பீமனிடம்
“ஆண்டுகள் ஆயிரம் கடந்தவன் நான்;

ஆயாசம் தீரப் படுத்துள்ளேன்! நீயும்
ஓயாமல் சப்தம் செய்யாதே” என்றது.

“வழியையும் மறைத்துக்கொண்டு நீ
வம்புகளும் என்னிடம் செய்கின்றாயா?”

” எழ சக்தி இல்லை! வேண்டுமென்றால்,
என்னைத் தாண்டிச் செல்லுவாய் நீ”

“பிராணிகளைத் தாண்டக் கூடாது! என்
பிராணன் போனாலும், அதைச் செய்யேன்.

உன் வாலை நகர்த்தி வழி செய்து கொண்டு,
என் வழியே நான் போகின்றேன்; ஏன் வம்பு?”

எத்தனை முயன்ற போதும், அதன் வாலை
எள்ளளவும் நகர்த்த முடியவில்லையே!

என்ன மாயம் இது? என்ன மந்திரம் இது?
என்ன ஆயிற்று, என் பலம் எல்லாம்?

“நீர் வெறும் குரங்கு அல்ல! சொல்லும்
நீர் யார் என்னும் உண்மையை எனக்கு”.

“நான் உன் அண்ணன், வாயு குமாரா!
நான்தான் அண்ணன் ஹனுமான்”

ஆலிங்கனம் செய்த சகோதரர்களின்
அழகே அழகு! கண்டால் கண் படும்!

அருமைத் தம்பி பீமனுக்கு, சில அரிய
வரங்கள் அளித்தான், அண்ணன் ஹனுமான்.

“சிம்ம நாதம் நீ செய்யும் போதெல்லாம்,
சேர்ந்து ஒலிக்கும் அங்கே என் குரலும்!

பார்த்தன் தேர்க் கொடியினிலே நான்
பறந்த வண்ணம் வெற்றியை அளிப்பேன்.”

சௌகந்திச் செடியையும், மலரையும் பெற்று,
சௌகரியமாகத் திரும்பிச் சென்றான் பீமன்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE TWO BROTHERS

When the Pandavas and Paanjaali were in the Naaraayana ashramam,an unusual flower with an exotic fragrance came to Paanjaali, carried by the wind. She was fascinated by the shape and smell of the rare flower and bade Bheeman to get her the plant and its flower.

He followed the scent of the flower and reached a field of banana trees. A large glowing monkey was lying there stretched out and blocking the way completely.

When Bheeman told it to move out of his way, it replied saying that it was thousands of years old and could not move any limb of its body.

Bheeman tried to pull aside its tail and move on. But however hard he tried, he could not budge the tail of the monkey even by one inch.

The monkey then revealed is true identity as Hanuman the Vaayu puthran to Bheeman the other Vaayu puthran!

They both embraced. Hanuman gave Bheeman blessings and a promise that whenever Bheeman made a sound in the warfield, Hanuman’s voice will add on to it.

Hamuman will be on the flag on Arjuna’s chariot and protect him.Beeman got the Sowgandhi flower and plant and went back to Paanjaali.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s