52. வரமும், சாபமும்.


சூரன் என்னும் யாதவகுலத் தலைவனின்
சீரிய புதல்வியே பிரதை என்னும் குந்தி.
குந்தி போஜனுக்குத் தத்து அளிக்கப்பட்டு,
குந்தி தேவி எனப் பெயர் பெற்றவள் அவளே.

தந்தையின் விருந்தினரான துர்வாசருக்கு,
சிந்தை மகிழ அவள் சேவை செய்ததால்,
விந்தையான வரம் ஒன்று அளித்து, அதன்
மந்திரத்தையும் உபதேசித்தார், அம்முனிவர்.

எந்த தேவனை அவள் அழைத்தாலும்,
மைந்தன் ஒருவனைத் தன் தேஜசுடன்
அளிப்பான், அந்த தேவன் அவளுக்கு.
களிப்புடன் பெற்றுக் கொண்டாள் வரம்.

விந்தையாகத் தோன்றும் இந்த வரம்,
சிந்தனை செய்யக் கூடிய எவருக்குமே!
கணவன் இருக்கும்போது பிள்ளை வரம்
வணங்கத் தகுந்த தேவர்களிடம் ஏன்?

பின்னர் நிகழ்வதை ஞான திருஷ்டியால்,
முன்னமே அறிய வல்லவர் முனிவர்.
பிள்ளைகள் இல்லை கணவன் மூலம்;
பிள்ளைகள் பெறுவாள் கடவுளர் மூலமே.

காட்டில் வாழும் ரிஷிகளும், பத்தினிகளும்
காட்டு விலங்குகளின் வடிவினை எடுத்து,
ஓடிக் களித்து, விலங்குகள் போலவே தாம்
கூடி மகிழ்வது, அப்போதைய வழக்கமாம்.

சுகித்திருந்த மான்களில் ஒன்றின் மேல்,
தகிக்கும் பாணம் எய்து வீழ்த்திய, மன்னன்
பாண்டுவுக்குக் கிடைத்தது ஒரு கொடிய சாபம்,
“மாண்டு போவாய், மனைவியைக் கூடினால்!”

வனம் ஏகினான் பாண்டு மனைவியருடன்,
மனம் சஞ்சலம் இன்றி வாழ்ந்து வந்தனர்.
பாண்டுவின் அனுமதியுடன், மனைவிகள்
பாண்டவரைப் பெற்றனர், அரிய வரத்தால்.

சாபம் அளிப்பவர் வரமும் அளிப்பார்!
சாபத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
இறை அருள் இருந்தால், தேடி வரும்
இறை அருளால் ஒரு வரமும் நம்மை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

THE BOON AND THE CURSE.

Sooran was a famous leader of the YAdhavAs. He had a pretty, good natured and lovely daughter whose name was Prutha. Kuntibojan was childless and adopted this girl. She was thence called as Kunti.Devi.

When DurvAsa rishi visited her father, Kunti served him well and took excellent care of him. The rishi was pleased with her and taught her a mantra and gave her a boon.

She could call any God with her mantra and beget a son with the amsam and tejas of the God. Kunti was very pleased with this boon.Any logical mind would wonder!

Why should she get sons with the help of Gods when she has her husband! Apparently the rishi could foresee her future and the need for this boon.

King PAndU whom Kunti married went for hunting.A rishi and his wife had assumed the forms of two deers and were playing amorously. He shot an arrow and killed one of the deers.

The rishi cursed him that if ever he united with his wife, he would die immediately. PAndu became very sad and unhappy. He went to the forest with his two wives and lived the life of brahmachari.

With the permission of PAndU,the wives called the dEvatAs and got five sons-the PAndavAs.

The boon may precede the curse or the curse may precede the boon. But every curse God also gives boon and balances them in a subtle way!

Advertisements

2 Responses to 52. வரமும், சாபமும்.

  1. v l brinda says:

    god gives us grief, but in the end it will become a boon or happiness

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s