54. பக்தனின் பக்தன்.


நாபாகன் என்னும் மன்னனின் மகன்,
நானிலம் புகழும் மன்னன் அம்பரீசன்.
பிராமண சாபத்தை வென்று, புகழ் பெற்ற
பரம பாகவதன், பக்தன், ஞானி, அரசன் .

பக்தியுடன், சம நோக்கும் கொண்டு,
யுக்தியுடன் அரசாண்டு வந்தவனின்
விவேக, வைராக்கியங்களைக் கண்டு,
விஷ்ணு அளித்தார் தன் சுதர்சனத்தை.

பகைவர்களிடமிருந்து கணம் தவறாது,
பாதுகாத்து வந்தது சுதர்சனச் சக்கரம்.
பசுதானமும், துவாதசி விரதமும் செயும்
விசுவாச அரசனிடம் துர்வாசர் வந்தார்!

உணவு உண்ண அழைத்ததும், முனிவர்
உணவுக்கு முன்பு நீராடச் சென்றார்.
விரதம் முடிக்கும் வேளை வரவே,
அரசன் தண்ணீரைப் பருகி முடித்தான் .

தம் ஞான திருஷ்டியால் கண்ட முனிவர்,
தம் கோபம் பொங்கி எழ, அக்கணமே
ஏவினார் அவனை அழித்துவிட, ஒரு
பேயினை ஜடையில் தோற்றுவித்து.

ஊழித்தீயைப்போல அழிக்க வந்த பேயை,
ஆழிச் சக்கரம் சினந்து அழித்துவிட்டது.
ஓட ஓட விரட்டிச் சென்று, முனிவரை
ஓடச் செய்தது மூவுலகமும், சுதர்சனம்.

பிரமனைச் சென்று அடைந்தார் முனிவர்.
பிரமனோ நாரணனை அஞ்சுபவர் அன்றோ?
கைலாசம் சென்றாலும் பலன் இல்லையே!
கைலாசபதியும் நாரணனிடமே அனுப்பினார்.

நாராயணணும் கை கொடுக்கவில்லையே!
“நான் செய்வது ஒன்றுமில்லை முனிவரே!
பக்தனின் பக்தன் நான் என்று நீர் அறியீரா?
பக்தனின் பாதம் சென்று பற்றுங்கள்” என்றான்.

காலடியில் வீழ்ந்த பெருந்தவ முனிவரின்
கோலம் கண்டு மனம் பதைத்த மன்னன்,
சக்கரத்திடம், “இவரை விட்டு விடு!” என,
சக்கரமும் அங்கிருந்து அகன்று சென்றது.

பிராமணசாபம் என்றால் உலகே அஞ்சும்!
பிராமணரையே அஞ்ச வைத்த ஒருவன்,
சாபத்தை வென்று, இறைவனின் நல்ல
நாமத்தின் புகழை நிலை நிறுத்தினான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

A DEVOTEE OF HIS DEVOTEES.

Ambareesan was the son of King NaAbAgan. He was a gnAni, and a staunch devotee of Lord VishnU.He treated everyone equally. He had humility, vairAgyam and vivEkam.Lord VishnU was so pleased with him that He appointed His sudharsana chakram for protecting Ambareesan.

Ambareesan observed DwAdasi vratham and gave gift of cows to brahmins. DhurvAsa came to visit the king. He was invited for a feast and went for a bath. The time for completing the vratham had come but the rishi had not returned.

So the king drank some water and completed his vratham. DurAsA knew his through his gnAna dhrushti and became mad with anger. He created a demon from his matted hair to kill Ambareesan.

The King was not afraid of the demon. Sudarsanam destroyed the demon and started chasing the rishi all over the three worlds.

The rish sought Brahma’s protection in vain. Siva in KailAsh advised him to go to Vishnu. Vishnu said, “I am a devotee of my devotees. There is nothing I can do! Seek the pardon of Ambareesan against whom you gave sinned.”

The rishi fell at the king’s feet. The king ordered the discus to spare the rishi.Thus the king defied the terrifying curse of a brahmin and established the greatness of a devotee.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s