ஓர் அறிமுகம்.


அறியவேண்டியவைகள் ஆயிரம் இருந்தாலும்,
அறியாமலேயே வாழ்கின்றோம் நம்மில் பலர்!
தாமதம் ஆனாலும் நஷ்டமில்லை நமக்கு,
நாமாக அவற்றைத் தவிர்க்காதவரையில்!

இளமையில் கல் என்ற வாக்கு உண்மையே!
முதுமையில் கல்லாதே என்ற வாக்கு இல்லையே!
கற்பதற்கு ஓர் ஆர்வமும், அறிவும்தான் தேவை;
கற்பதற்கு நேரமும், அமைதியும் கூடத் தேவை.

“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு ” என்ற தெள்ளு தமிழ்
வள்ளுவன் வாக்கின்படி, இன்றிலிருந்தாவது நாம்
வயதை மறந்து, அறியாதவற்றைக் கற்போம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழுவோம்,
விசாலாக்ஷி ரமணி.

Advertisements

4 Responses to ஓர் அறிமுகம்.

 1. Raji Ram says:

  Congratulations for starting the new chapter!
  Raji Ram

 2. முன்னிருந்து தூண்டுகோலாகவும்,
  பின்னிருந்து உந்துகோலாகவும்,

  கீழிந்திருந்து நெம்புகோலாகவும்,
  வழி நடத்த நீ இருப்பதாலேயே,

  புதிய பகுதியைத் தொடங்கமுடிந்தது!
  சிறியவளாகிலும் நீ எனக்குஅன்னையே!

 3. Sridharan says:

  கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
  உற்ற துன்பம் எல்லாம் மாற்ற வல்லது அன்னை
  பெற்ற வேளையிலும் அவளுக்கு பேருவகை தருவது
  நற்றவம் செய்வோர்க்கும் நல்லருள் தருவது கல்வி

  • கற்பதற்கு வயது தடையாக இருக்கக் கூடாது.
   மாற்றுக் கருத்தே இல்லை எனக்கு இதில்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s